மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் டிவியை அணைத்ததற்கான மாமியாரின் மூன்று விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் கடந்த செப்டம்பர் 5 ம் தேதி ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க மாமியார் ஒருவர், இரவு நேரத்தில் வழக்கம்போல், தெய்வ வழிபாடு நடத்திகொண்டு கீர்த்தனை பாடிகொண்டு இருந்தார். அப்போது, இந்த பெண்ணின் மருமகள் தொலைக்காட்சியில் சத்தம் அதிகம் வைத்து சீரியல் பார்த்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் தனது மருமகளிடம் ஒலியைக் குறைக்கச் சொல்லியும், ஆனால் அவர் மறுத்துவிட்டார்.  கோபமடைந்த மாமியார் டிவியை அணைத்துள்ளார். இதனால் மாமியார் மற்றும் மருமகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.  கோவத்தில் மாமியாரின் வலது கையின் மூன்று விரல்களை மருமகள் கடித்ததாகக் கூறப்படுகிறது.


இதையடுத்து, மருமகள் மீது அம்பர்நாத்தில் உள்ள சிவாஜி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் இதுதொடர்பாக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர். 


இதுதொடர்பாக மூத்த காவல் ஆய்வாளர் அசோக் பகத் கூறுகையில், "அம்பர்நாத் பகுதியில் உள்ள சிவாஜி நகரைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனது மூன்று விரல்களில் கடிக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதில் அவரது 32 வயதான மருமகளால் தான் பாதிக்கப்பட்டதாகவும் தெரிபித்தார். அதிக சத்தத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார் என் மருமகள். பூஜையில் இருந்த நான் சிறிது சத்தத்தை குறைக்க சொன்னேன். 


ஆனால், அவர் குறைக்க மாட்டேன் என்று கூறி வாக்குவாதத்தைத் தொடங்கினார். வீட்டில் அவள் என்ன வேண்டுமானாலும் செய்வேன். இது தன் கணவர் வீடு என்று தெரிவித்தார். நானும் இது என் மகன் வீடு, உன் வீடு அல்ல என்று கூறிவிட்டு டிவியை அணைத்துவிட்டேன். இதனால் கோவமான என் மருமகள் எனது வலது கையின் மூன்று விரல்களை கடித்தாள் என்றா. இதையடுத்து, மாமியாரை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி, மருமகள் மீது வழக்கு பதிவு செய்தோம். மாமியார் மற்றும் மருமகள் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், குடும்ப தகராறு என தெரிகிறது. மருமகளை இன்னும் கைது செய்யவில்லை’’ என்றார்.