திருவனந்தபுரம் அடுத்து அமைந்துள்ளது தம்பாவூர். இங்கு தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விடுதியின் பூட்டப்பட்ட அறையில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.


பின்னர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காயத்ரி என்பதும், அவருக்கு 24 வயதே ஆகிறது என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் விசாரணையில் காயத்ரி உயிரிழந்து கிடந்த அறை பிரவீன் என்பவரது பெயரில் பதிவாகியிருப்பது தெரியவந்தது. மேலும், காயத்ரியும், பிரவீனும் ஒரே நகைக்கடையில் பணியாற்றி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.




இதையடுத்து, அறையை எடுத்து தங்கியிருந்த பிரவீனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரவீனும், காயத்ரியும் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளனர். நகை விற்பனையாளரான பிரவீனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அப்போது, அங்கு பணிக்கு சேர்ந்த நகைக்கடை வரவேற்பாளர் காயத்ரியுடன் பழக்கம் ஏற்பட்டது.


இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரவீனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும் காயத்ரி அவரை காதலித்துள்ளார். அப்போது, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை பிரவீனின் மனைவி பார்த்துள்ளார். இதையடுத்து, தனது கணவன் பிரவீனிடம் சண்டையிட்டது மட்டுமின்றி அவர் பணிபுரியும் நகைக்கடை நிர்வாகத்திடமும் முறையிட்டுள்ளார்.


இதைக்கேட்ட அதிர்ச்சியடைந்த நிர்வாகம் பிரவீனை திருவனந்தபுரத்தில் இருந்து திருவண்ணாமலையில் உள்ள அவர்களது கடைக்கு பணியிட மாற்றம் செய்தது. மேலும், காயத்ரியை வேலையை விட்டும் நீக்கியது. இதனால், மனமுடைந்த காயத்ரி பிரவீனை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அவரை சமாளிப்பதற்காக பிரவீன் திருவனந்தபுரத்தில் இருந்த சர்ச் ஒன்றில் தாலி கட்டியுள்ளார். அதை தனக்கு ஆதாரமாக காயத்ரி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.




ஆனால், இந்த திருமணம் பற்றியும், புகைப்படம் பற்றியும் யாருக்கும் தெரியக்கூடாது என்று பிரவீன் கூறியுள்ளார். ஆனால், தனது தோழிகளுக்கு தனது திருமணம் பற்றி தெரிவிக்க விரும்பிய காயத்ரி, பிரவீனுடான தன்னுடைய திருமணத்தை ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இந்த விவகாரம் காயத்ரியின் தோழிகள் மட்டுமின்றி பிரவீனின் கடை நிர்வாகத்திற்கும் தெரியவந்துள்ளது.


இந்த விவகாரத்தை அறிந்த பிரவீன் திருவனந்தபுரத்தில் தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு காயத்ரியை வரவழைத்துள்ளார். அங்கு அவரிடம் இந்த ஸ்டேட்டஸ் விவகாரம் பற்றி பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த பிரவீன் காயத்ரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது சடலத்தை அந்த அறையிலே போட்டு பூட்டிவிட்டு தப்பியும் ஓடியுள்ளார். பின்னர், அவரை போலீசார் கைது செய்தனர். தற்போது, பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவு கொலையில் முடிந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண