பிரேசிலில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


பிரேசிலில் கடந்த ஆண்டு ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். மேலும் ஒவ்வொரு 7 மணி நேரத்திற்கும் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார் என்ரு திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021 ஆம் ஆண்டில் தென் அமெரிக்க நாட்டில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 3.7 சதவீதம் அதிகரித்து 56,098 ஆக உயர்ந்துள்ளது என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரேசிலிய பொது பாதுகாப்பு மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.


பெண்கொலைகள் 2.7 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஒட்டுமொத்தமாக 1,319 ஆக இருந்ததால், இந்த எண்ணிக்கை ஆபத்தானதாகவே உள்ளது. பெண் கொலைகளில் சிறிய சரிவு இருந்தபோதிலும், எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது” என்று அமைப்பின் இயக்குனர் சமிரா பியூனோ கூறினார்.


மேலும், “இந்த புள்ளிவிவரங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கும், பிரேசிலில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் பொதுக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டிய அவசரத்தைக் காட்டுகின்றன” என்றும் அவர் கூறினார்.


இந்த ஆய்வு காவல்துறைக்கு அதிகாரப்பூர்வ அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண