தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது மடத்தூர். இங்குள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் பிரவீன். இவரின் மனைவி இராமலட்சுமி. (வயது 35).  இவர் பாவூர்சத்திரம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் ஜான்பிரவீன், அவர் ஆவுடையானூர் அருகே உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும்  தங்களுக்கு திருமணமாகி ஆறு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தனது கணவர் கடந்த மாதம் 21ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் இருந்து நான்கு நாட்கள்  மாணவர்களுடன் சேர்ந்து கேரளாவிற்கு இன்ப சுற்றுலா செல்வதாக கூறி சென்றார். பின்னர் மீண்டும் 27 ஆம் தேதி இரவில் 11 மணியளவில் மீண்டும் ஒரு சுற்றுலாவிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் தற்போது அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. எனவே காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என இராமலட்சுமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.


இந்த நிலையில் போலீசார் காணாமல் போன ஜான் பிரவீன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஜான்பிரவீன் குறும்பலாபேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் தலைமறைவாகியது தெரிய வந்தது. குறிப்பாக  ஜான் பிரவீன் பணிபுரிந்து வந்த அதே கல்லூரியில் தான் அந்த  மாணவியும் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் இருவரும் தலைமறைவாகியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். பாவூர்சத்திரம் அருகே திருமணமான கல்லூரி பேராசிரியர் கல்லூரி மாணவி ஒருவருடன் தலைமறைவாகி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண