விவாகரத்து தர மறுத்த மனைவியின் பல்லை கணவர் உடைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 34 வயது நபரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜிநகர் குடும்பநல நீதிமன்ற வளாகத்திலேயே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:


மனைவி சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கணவன் விமன் நகரைச் சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடந்து வந்தது. கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இருவரையும் கவுன்சிலிங்குக்கு வருமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இருவரும் வந்தனர். அப்போது அவர்களுக்கு நீதிமன்றத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கினர். இதனைத் தொடர்ந்து மனைவி விவாகரத்து வழங்க சம்மதம் இல்லை எனத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் வாயில் குத்தினார். இதில் அந்தப் பெண்ணின் பல் உடைந்தது. இது தொடர்பாக காவல் துறை வழக்கு தொடர்ந்துள்ளது.


நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.




குடும்ப வன்முறை என்றால் என்ன?


உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, பொருளால் தாக்குவது போன்றவை இதில் அடங்கும். இது, கணவனால் மட்டுமே பெண்களுக்கு வன்முறை நடப்பது என்றில்லை.


கணவர் வீட்டார் யார் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இதனாலேயே, குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இனி பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வகையில், திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்கள் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமியர் மீதும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இது பெண்களுக்கு கொடுமைப்படுத்தும் கணவர் வீட்டாரின் மீதும் நடவடிக்கை எடுக்க உதவும்.


கொரோனா காலத்தில் குடும்ப வன்முறை மிகவும் அதிகரித்தது. உலகளவில் இது குறித்த ஆய்வறிக்கைகள் வெளியாகின. பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தமிழகத்திலும் இந்தச் சேவை உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்