பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகத் தமிழகக் காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல்‌ குற்றத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும்‌ சட்டம் (போக்ஸோ) 2012-ன் படி 2019 -2021வரை பதிவான வழக்குகளின்‌ எண்ணிக்கை விவரத்தைத் தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு 1742 பாலியல்‌ பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2020ஆம் ஆண்டில் 2,229 வழக்குகளாக அதிகரித்துள்ளது. அதேபோல 2021ஆம் ஆண்டு பதிவான பாலியல் பலாத்கார வழக்குகளின் எண்ணிக்கை, 3425 ஆக உள்ளது.

2019-ல் பதிவான இதர வழக்குகளின் எண்ணிக்கை 654 ஆக உள்ள நிலையில், அது 2020-ல் 861 ஆக அதிகரித்தது. அதேபோல 2021-ல் பதிவான இதர வழக்குகள் 1044 ஆக உள்ளன. 

ஆக மொத்தத்தில் 2019ஆம் ஆண்டு பதிவான மொத்த வழக்குகள்‌ 2398 ஆக உள்ளது. 2020ஆம் ஆண்டில் 3090 வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த எண்ணிக்கை 2021-ல் 4,469 ஆக அதிகரித்துள்ளது. 

எனினும் 2021 ஆம்‌ ஆண்டிற்கான தரவு தற்காலிக எண்ணிக்கை மட்டுமே. தமிழ்நாட்‌டில்‌ குற்றத்திற்கான தரவு வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

 


குற்ற வகைகள்‌
 2019-ல்‌ பதிவானவை 2020-ல்‌ பதிவானவை 2021-ல்‌ பதிவானவை
பாலியல் பலாத்காரம்
 370
404 442
வரதட்சணை மரணம்  28  40  27 

கணவர்‌ மற்றும்‌ அவரது உறவினர்களால்‌ கொடுமை
 781  689 875
மானபங்கம்   803 892 1077
மொத்த குற்றங்கள் 1982 2025 2421


எனினும் 2021 ஆம்‌ ஆண்டிற்கான தரவு தற்காலிக எண்ணிக்கை மட்டுமே. தமிழ்நாட்‌டில்‌ குற்றத்திற்கான தரவு வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள குற்ற வழக்குகளும் உயர்வு

இணையதள குற்ற வழக்குகள் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளன. 2011-ல் இணையதள குற்றப் புகார்களின் எண்ணிக்கை 748 ஆக இருந்த நிலையில் 2021ல் 13,077 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழகக் காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.