கலிஃபோர்னியா நகரில் சமீபத்தில் நடந்த மிக்பெரிய துப்பாக்கி சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 


இது தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி காவல் அதிகாரி ராபர்ட் லுனா தெரிவிக்கையில், ஒரு வேனில் இருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. அருகில் சென்று பார்த்தப்போது உள்ளே, ஒருவர் இறந்து கிடந்தார். பின்னர், அவர் 72 வயதாகும் Huu Can Tran என்று கண்டறிந்தோம்.” என்றார். 


மேலும், இவர் கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் என்றும் தெரிவித்துள்ளனர். கலிஃபோர்னியாவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் பத்து பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தற்போது, அவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




இதையும் வாசிக்க.


Bank of Baroda Recruitment : வங்கியில் வேலை வேண்டுமா? நாளை மறுநாளே விண்ணப்பிக்க கடைசி நாள்! கூடுதல் விவரங்கள் இதோ!


Indian Post Jobs: அஞ்சல் துறையில் நேரடி முகவர் வேலை; சென்னையில் நாளை மறுநாள் நேர்காணல்! கூடுதல் விவரம்!