மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த காவல்நிலையத்தில் பணியாற்றிய போலீசார் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement


சாராய வியாபாரிகளால் நடந்தேறிய இரட்டை கொலை


மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்தமாதம் பிப்ரவரி 14 -ம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து முட்டம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் தாக்கியுள்ளனர். அப்போது அதனை தடுத்த தினேஷ் நண்பர்களான முட்டம் ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஹரி சக்தி ஆகிய கல்லூரி மாணவர்கள் இருவரையும் சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கொலையாளிகளை அனைவரையும் உடனே கைது செய்ய வேண்டும், இறந்த இளைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இதையும் படிங்க : I Phone 16e Review: பட்ஜெட் விலையில் ஐ போன் 16e: விலை, ஸ்டோரேஜ் அம்சங்கள் இதோ.!




பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கடும் கண்டனங்கள் 


இதுகுறித்து பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாற்றை தெரிவித்தனர். இதனால் இச்சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை,  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.


இதையும் படிங்க : Vikraman: உள்ளாடையுடன் ஓடியது நானா? விளக்கம் போட்ட ட்வீட்டை நீக்கிய விக்ரமன் - நடந்தது என்ன?




முன்னதாக மூன்று பேர் மாற்றம் 


அதனைத் தொடர்ந்து இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக உடனடியாக பெரம்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பின்னர் எஸ்பி தனிப்பிரிவு காவலர் பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 


இதையும் படிங்க : தூத்துக்குடியில் இருந்து வந்த கப்பல்.. நடுக்கடலில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. சிக்கியது கஞ்சா ஆயில்




கூண்டோடு காலியான காவல்நிலையம் 


இந்நிலையில் பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 19 காவலர்கள் இன்று அதிரடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சீர்காழி உட்கோட்ட காவல் நிலைகளுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.