பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விக்ரமன். பத்திரிகையாளரான இவர் விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். 


உள்ளாடையுடன் ஓடுவது விக்ரமனா?


இந்த நிலையில், சமூக வலைதளங்களில் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓடுவது போலவும், அவர் பெண் உடையில் சென்று பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் வீடியோ இணையத்தில் கசிந்தது. பிக்பாஸ் மூலம் பிரபலமான விக்ரமன் மீது வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


விக்ரமன் சொல்வது என்ன?


இந்த நிலையில், இந்த வீடியோ தொடர்பாக விக்ரமன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை அடிப்படை ஆதாரமின்றி, உண்மைத் தன்மையை ஆராயாமல் எந்த அறமும் இன்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என்னைப் பற்றி அவதூறு பரப்புவதை விடுத்து வேறு வேலை இருந்தால் பாருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டார்.






இந்த சூழலில், பிரபல ராஜுமுருகன் வசிக்கும் ஐயப்பந்தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் தொல்லைகள் நடப்பதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார். அந்த விவகாரத்திலும் விக்ரமனுக்கு தொடர்பு இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இணையத்தில் விக்ரமன் பெண் ஆடையுடன் இருக்கும் வீடியோவையும் இந்த தகவலையும் இணைத்து பலரும் தகவல் பரப்பினர். 


இந்த சூழலில், விக்ரமன் இந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இணையத்தில் பரவிய அந்த வீடியோவில் விக்ரமன் பெண்கள் அணியும் உள்ளாடையுடன் ஓட அவரை சிலர் துரத்துவது போலவும் வீடியோவில் உள்ளது. எந்த இயக்குனரின் இயக்கத்தில் உருவான படத்தின் படப்பிடிப்பில் இந்த காட்சி படமாக்கப்பட்டது? எப்போது இதன் படப்பிடிப்பு நடந்தது? என்பது குறித்த எந்த தகவலும் அவர் தெரிவிக்கவில்லை.