Crime: உத்தர பிரதேசத்தில் மது அருந்துவதை தடுத்த மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மது அருந்துவதை தடுத்த மனைவி:


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 


அதாவது, மது அருந்துவதை தடுத்த மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.  உத்தர பிரதேச மாநிலம் முஜாரியா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட புடானில் உள்ள நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் சக்சேனா. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷனோ (40).


இந்த தம்பதிக்கு 8 வயது மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர்  முனீஸ் சக்சோ நாள்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தான், நேற்று இரவு மது  அருந்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.


ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்:


வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, மனைவி இதனைத் தடுக்க முயன்றார். இதனால், இவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. வாக்குவாதம் நீடித்த நிலையில், தனது மோட்டார் பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து, ஷனோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். 


இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷனோவின் மாமியார் முன்னி தேவி, ஷனோவை காப்பாற்ற முயன்றுள்ளார்.  இதில்,  அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஷனோ தீயில் எரிவதை கண்டு அவரது குழந்தைகள் கத்தி கூச்சலிட்டர். இதனால், அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


இதுகுறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து ஷனோவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  ஷனோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.  


இந்ந சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முனீஸ் சக்சேனாவை தேடி வருகின்றனர். 




மேலும் படிக்க


Rajasthan Electric Shock: 14 குழந்தைகள் மீது மின்சாரம் தாக்கியதால் பரபரப்பு! சிவராத்திரி விழாவில் அதிர்ச்சி!