சேலம் மாவட்டம் காமநாயக்கன்பட்டி அடுத்துள்ள ராஜா பட்டறையில் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி வசந்தா நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தினேஷ் என்ற மகனும், நிஷாந்தி என்ற மகளும் உள்ளனர். தினேஷ் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நிஷாந்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திரன் இறந்த பின்னர் வசந்தோ அவருடைய பெண் பயிலும் கல்லூரியில் அலுவலக உதவியாளராக சேர்ந்து மகளுடன் தங்கி வந்துள்ளார். மேலும் இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால் வீடு கட்டுவதற்கு திட்டமிட்டு வசந்தா தனது பி.எஃப் கணக்கை எடுக்க விண்ணப்பித்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அவருடைய வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அன்று மாலை சாரதா கல்லூரியில் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு அருகே இருக்கும் வங்கி ஏடிஎம் மையத்தில் 500 ரூபாய் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் நின்றிருந்த நபர் ஒருவர் ஏடிஎம் மிஷினில் கை வைத்த படி வசந்தாவை நகருமாறு கூறியுள்ளார்.



ஏடிஎம் மிஷினில் இருந்து வசந்தாவின் ஏடிஎம் கார்டு எடுத்துவிட்டு வேறொரு ஏடிஎம் கார்டை வசந்தாவிடம் கொடுத்துள்ளார். அதனை கவனிக்காத வசந்தா அந்த கார்டையும் 500 ரூபாய் படத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வசந்தாவின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட அவருடைய மகள் நிஷாந்தியின் செல்போனுக்கு இரண்டு லட்சம் ரூபாய் எடுத்ததற்கு குறுந்தகவல் அடுத்தடுத்து வந்துள்ளது. இது குறித்து மகள் வசந்தாவிடம் கேட்டபோது 500 ரூபாய் மட்டும் எடுத்ததாக கூறியுள்ளார். நிஷாந்தி மற்றும் அவரது தாய் வசந்தா இருவரும் இது குறித்து சேலம் மாநகர் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். நாளை வந்த புகார் கொடுங்கள் என்று கூறி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசந்தா மீண்டும் அழகாபுரம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். ஏடிஎம் மையத்தில் வசந்தா பணம் எடுக்கும் இப்போது பின்னால் நின்றிருந்த மர்ம நபர் ஏடிஎம் கார்டு ரகசிய குறியீடு என்னை பார்த்துள்ளார். வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துள்ளோம். ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் அடிப்படையில் மர்மநபர் தேடப்பட்டு வருகிறார்.


 


இதுவரை வசந்தா வங்கிக் கணக்கிலிருந்து 2.88 லட்சம் ரூபாய் எடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவுப்படி மர்ம நபரை தேடிப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் மர்ம நபரின் முகம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோன்று கோவை, திருச்செந்தூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி என பல மாவட்டங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. மேலும் ஏடிஎம் கார்டு திருடி பணம் திருடுவதில் பலர் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தமிழ்நாடு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.