சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்து வருவதாக சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் சண்முகப்பிரியாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பேருந்து நிலையப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைபாண்டியன் ஆகிய 4 பேரிடம் விசாரணை செய்ததில் கேரளா லாட்டரி என்ற பெயரில் போலி டோக்கன் விற்பனை செய்தது தெரியவந்தது அவர்களிடமிருந்து ரூ.4040 மதிப்புள்ள 50 டோக்கன்கள் மற்றும் 1500 ரூபாய் பணம் பறிமுதல் செய்து சிவகங்கை நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஜூன் முதல் வாரத்தில் 500 நகர்ப்புற மக்கள் நல்வாழ்வு மையத்தை ஒரே நாளில் முதல்வர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும் செய்திகள் படிக்க - சிவகங்கையில் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் அதிரடி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்