WhatsApp Feature : ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் Username முறை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


வாட்ஸ்-அப் செயலி:


மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்-அப் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், போட்டி செயலிகளிடம் வீழ்வதை தவிர்க்கும் வகையிலும், பயனாளர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி  வருகின்றன.


குறுந்தகவலை பகிர்ந்து கொள்வதற்கான முதன்மை செயலியாக, வாட்ஸ்-அப் செயலி தொடர்ந்து நீடிப்பதற்கு மெட்டா நிறுவனம் வழங்கும், இந்த அடுத்தடுத்த அப்டேட்களும் முக்கிய காரணமாகும். அந்த வகையில்தான்,வாடிக்கையாளர்களை கவரும் விதமாக அடுத்ததாக, புதிய அப்டேட்களை அடுத்தடுத்து வழங்குகிறது.


புதிய அம்சம்


அந்த வகையில் தற்போது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் Username முறை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர் பெயர்களை (Username) அமைப்பதற்கான புதிய அம்சம் விரைவில் வெளிவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வாட்ஸ் அப் யூசர்-நேம் (Whatsapp Username) கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காண அனுமதிக்கும் அம்சத்தில் வாட்ஸ் அப் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.


வழக்கமாக பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை பயன்படுத்தாமல் இனி இந்த யூசர்-நேமை (Username) பயன்படுத்தலாம். இனி எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்துக் கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை நிறுவனம் மிக விரைவில் அதன் பீட்டார் அப்பேட்டில் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது.  


இதேபோன்ற அம்சத்தை அடிப்படையாக கொண்டு டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் வெளிவந்ந அப்டேட்


பயனர்களின் பிரைவஸிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் லாக் சாட் (lock chat) என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகத்தியுள்ளது. இந்த வசதி மூலம் பயனர்கள் ஒருவருடனான சாட்-டை (chat) பிரத்யேகமாக லாக் செய்து வைத்துக் கொள்ள முடியும். மேலும், வாட்ஸ்-அப் செயலியில் அனுப்பிய மெசேஜை 15 நிமிடங்களுக்குள் திருத்தி அனுப்பும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.


ஏற்கனவே போட்டோ மற்றும் வீடியோக்களை மற்றொரு நபருக்கு அனுப்பும்போது, அதில் கேப்ஷன்  சேர்க்கும் வசதி பயன்பாட்டில் உள்ளது. அந்த கேப்ஷனை திருத்தி எழுதவும், டெலிட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Amit Shah Assam Rally: அடுத்த முறையும் மோடிதான் பிரதமர்...300 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்.. அமித்ஷா பேச்சு