சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பா நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் சரவணன் இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சொந்த வீடு வாங்க நினைத்து வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து, வசிக்கும் வீட்டின் பின்புறம் விலைக்கு வந்த வீடு ஒன்றை சொந்தமாக வாங்குகிறார்.
வெளிநாடுலிருந்து வந்த பின் இருவரும் அந்த வீட்டில் வசிக்கலாம் என்று இருந்தபோது மனைவியின் தோழி சண்முகபிரியா கணவனிடம் கருத்து வேறுபாட்டால் குழந்தையுடன் தனியாக வாழவேண்டிய வீடு கேட்டுள்ளார். இரக்கப்பட்ட சரவணன் மனைவி காயத்திரி ரூபாய் 3 லட்சம் பெற்றுக் கொண்டு 2 வருடகால ஒப்பந்தத்துடன் ஒத்திக்கு கடந்த வருடம் பிப்ரவரியில் வீட்டை ஒத்திகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் சரவணன் பணி ஒப்பந்தம் முடிந்து வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்திட வாங்கி புது வீட்டில் குடியேறி வாழ்க்கை நடத்துவோம் என முடிவு எடுத்து தனது வீட்டை காலி செய்து தருமாறு காயத்திரி சண்முகபிரியாவிடம் கூறியுள்ளனர்.
இதற்கு சண்முகப்பிரியா ஒத்துக்கொள்ளாததால் இது சம்பந்தமாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு 5 மாதத்தில் வீட்டை காலி செய்து கொடுப்பதாக போலீசார் முன்னிலையில் சண்முகபிரியா கூறி உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சரவணன் சண்முகப்பிரியாவிடம் 5 மாதம் முடிவடைய போகிறது எப்போது வீட்டு சாவி கொடுப்பீர்கள் என கேட்டுள்ளார்.
வீடு காலி செய்வது குறித்து சண்முகப்பிரியா தனது தாய் லதாவிடம் கூற லதா மருமகன் செல்வகுமாரிடம் கூற ஆத்திரமடைந்த செல்வ குமார் தனது மாமியார் லதாவுடன் இருசக்கர வாகனத்தில் சரவணன் வசிக்கும் வீட்டிற்கு தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றவே தான் சாக்கு பையில் மறைத்து வைத்திருந்த வீச்சருவாள் எடுத்து சரவணனை ஒட ஒட வெட்ட பாய்ந்துள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக சரவணன் முதுகில் காயத்துடன் தப்பித்து ஓடி விடுகிறார். மாடியில் இருந்த சரவணன் மனைவி கத்தி கூச்சலிட்டு காப்பாற்ற கிடைத்த பொருள்களால் தாக்க விழந்து எழுந்த செல்வகுமார் இருசக்கர வாகனத்தில் தப்பினார். முதுகில் வெட்டு காயம் பட்ட சரவணன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சி.சி.டிவியில் பதிவாகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் குமார் என்ற செல்வகுமார் ,மாமியார் லதா ஆகிய இருவர் மீது காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர் .
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து பச்சிளங் குழந்தைக்கு காயம்.. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி..