சிவசங்கர் பாபா பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம்  சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில், நேற்று விசாரணை அதிகாரிகளாக டிஎஸ்பி குணவர்மன் மற்றும் ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, விசாரணையை தொடங்கிய அதிகாரிகள் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 


இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி தனிப்படை டேராடூன் விரைந்தது. புகார் கொடுத்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி பெற்ற வாக்குமூலம் அடிப்படையில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். மாரடைப்பு ஏற்பட்டதால் சிவசங்கர் பாபா டேராடூனில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், சிவசங்கர் பாபாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விதமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


Godmen of India | ஆசாராம் முதல் சிவசங்கர் பாபா வரை ..- பாலியல் சர்ச்சை பாபாக்கள் ஒரு ரீவைண்ட்!


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது தனியார் சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளி. இந்த பள்ளியை சிவசங்கர் பாபா என்பவர் நிர்வகித்து வருகிறார். இவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பயின்று வெளியேறி  மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும், அந்த மாணவிகள் சிவங்கர் பாபாதான் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டும், பள்ளியில் படிக்கும் மாணவிகள் பலரையும் கோபிகைகள் என்று மூளைச்சலவை செய்து அவர்களுடன் உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.




இதையடுத்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் வலுவாக குரல் கொடுக்கத் தொடங்கினர். குற்றம்சாட்டிய மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மாணவிகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருந்ததால் கடந்த 11-ஆம் தேதி பாபாவை நேரில் ஆஜராகும்படி ஆணையம் உத்தரவிட்டு இருந்தனர். இந்நிலையில் சிவசங்கர் பாபா தான் உத்தரகாண்ட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தன்னால் ஆஜராக முடியாது என்றும் விளக்கம் அளித்திருந்தார். 


இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதும் மகாபலிபுரம் அனைத்து மகளிர்  காவல்துறையினர் 354, 355, 363, 365 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மொத்தம் 15 புகார்கள் வந்ததாகவும் அதில் ஐந்து புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. '


கிஷோர் கே சுவாமிக்கு தொடரும் பாஜக ஆதரவு; ட்விட் போட்டு நீதி கேட்ட வானதி!