மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த தீமிதி திருவிழாவில் மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
Gold, Silver Price : சேமிப்புக்கு தங்கம்தான் பெஸ்ட்.. இன்னைக்கு இந்த ஸ்வீட் நியூஸைப் பாருங்க..
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தாயுடன் சுவாமி வழிபாட்டிற்காக வந்துள்ளார். அப்பொழுது, இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களிடம் தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக உருவானது.
இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களின் இரண்டு கடைகளை மற்றொரு தரப்பினர் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த புதுப்பட்டினம் காவல்துறையினர் மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகின்றனர். மேலும் 17 வயது சிறுமியின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இப்பகுதியில் இரு சமூகத்தினர் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருவதாக அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Ajith kumar: விமான நிலையத்தில் அஜித்... வைரலாகும் புகைப்படங்கள்...எங்கே செல்கிறார் தெரியுமா?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்