கடந்த மார்ச் 18 ம் தேதி தேனாம்பேட்டை அருகே நடிகர் சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்ட இன்னோவா கார் ஒன்று நடைபாதையில் இருந்த 70 வயது முதியவரை ஏற்றி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்த முனுசாமி நடைபாதையில் வசிப்பவர் என்றும், வாழ்வாதாரத்திற்காக அப்பகுதியில் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்தும் வந்துள்ளார். முனுசாமி ஒரு வாரத்திற்கு முன்பு வடிகால் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலில் சாக்கடை மூடி விழுந்து நடக்க முடியாமல் காயம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் 18ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் இன்னோவா கார் ஒன்று இளங்கோ சாலை-போயஸ் சாலை சந்திப்பில் சென்றபோது முதியவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் (இன்று) புதன்கிழமை வைரலாக பரவியது. இறந்தவர் நடுரோட்டில் அமர்ந்திருந்தையும், அப்போது ஒரு இன்னோவா கார் அவர் மீது மோதி அந்த இடத்தை விட்டு நிற்காமல் தப்பி வேகமாக சென்றதையும் அந்த வீடியோ காட்சியில் தெளிவாக காண முடிகிறது.
விபத்தில் முனுசாமிக்கு தலை, இடுப்பு, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அந்த வழியாக சென்றவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்தில் முனுசாமி சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டி. ராஜேந்திரனின் கார் டிரைவர் செல்வம் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த கார் யார் என்பது குறித்து தகவல் சேகரித்ததில் அது சிலம்பரசன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. எனினும், சம்பவதன்று காரில் யார் யார் இருந்தார்கள், கார் எங்கிருந்து வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்