திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். செய்யாறு பழனி தெருவை சேர்ந்த கணேசன் மகன் சுதாகர் (36), இவர் பைனான்ஸ் ஊழியராக வேலை புரிந்து வருகிறார். சுதாகருக்கு திருமணமாகி ராதா என்ற மனைவியும்,  ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுதாகரும், கல்லூரி மாணவியும் கடந்த 5 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சுதாகர், கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து அங்கு சென்றுள்ளார்.



மாணவியை மொட்டை மாடிக்கு தனியாக பேச வேண்டும் என கூறி அழைத்து சென்ற நிலையில், தான் வாங்கி சென்ற குளிர் பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த மாணவி மயங்கி அங்கேயே விழுந்த போது மாணவியை சுதாகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து சுதாகரிடமும் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு சுதாகரனின் மனைவியிடம்  நடந்த சம்பவத்தை கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.



அதன் பின்னர் மாணவியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சுதாகரனின் தாயாரிடமும் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதற்கும் எந்த சுதாகரின் தாயாரின் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து சுதாகரிடம் அவரது தாயார் கேட்ட நிலையில் அதற்கு சுதாகர் மறுப்பு தெரிவித்ததுடன் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என கூறி உள்ளார். பின்னர் மீண்டும் மாணவியின் வீட்டுக்கு சென்ற சுதாகர் மீண்டும் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து திருமண ஆசை காட்டி மீண்டும் மீண்டும் மாணவியுடன் தனிமையில் இருந்துள்ளார். 



இந்நிலையில் மாணவி கர்ப்பமானதால் மாணவியின் வயிறு பெரிதாக காணப்பட்டுள்ளது. இது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்த நிலையில் வயிற்றில் நீர்க்கட்டி உள்ளதாக கூறி ஆரம்பத்தில் சமாளித்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல வயிறு மேலும் பெரிதானதால் பெற்றோரிடம் உண்மையை சொல்லி மாணவி கதறி அழுதுள்ளார். இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அதிகாலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து கல்லூரி மாணவி செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்த நிலையில்  போலீசார் நடத்திய விசாரணையின் பேரில் பைனான்ஸ் நிறுவன ஊழியர் சுதாகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.