அடுத்தடுத்து கொலை

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கடந்த மார்ச் 23ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜக பட்டியலின மாநில பொருளாளருமான பி பி ஜி டி சங்கர் கடந்த மாதம் 27 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனால் ஸ்ரீபெரும்புதூர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவானது.

 

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 

 

தொடர்ந்து மாதம் ஒரு கொலை என இரண்டு கொலை சம்பவம் அடுத்தடுத்து, அரங்கேறியதால் மீண்டும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல், இருக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து, ஸ்ரீபெரும்புதூர் முழுவதையும் சுற்றி வளைத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடந்த 10 நாட்களாக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் சூழலில் பயங்கர ஆயுதங்களுடன், திட்டம் தீட்டி வந்த பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 20 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் 

 

20 பேரை கையும் களவுமாக

 

அதன்படி கிளாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் (31), பாலமுருகன் (30), அசோக் என்கின்ற ரத்தினகுமார் (25), மகேஷ் (24), வானவராயன் (30), அஜித் குமார் (26), ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வினோத் (31), திருநாவுக்கரசு (30),அருண் (27), வீரவேல் 27), ஸ்ரீபெரும்புதூர் , வி ஆர் பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த குணால் (21), சூர்யா(24), புருஷோத்தமன் (29), தீபக் ராஜ் (22),வீராசாமி பிள்ளை தெருவை சேர்ந்த லோகேஸ்வரன் (28), வளர்புரம் பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் (35), தொடுகாடு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (25), பாடிச்சேரி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் (24), சரவணன் (31),  திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (22) ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

இதனால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் காவல் துறைக்கு நன்றி தெரிவித்து  வருகின்றனர். மேலும் இந்த கைது சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 



யார் இந்த பிபிஜி குமரன் ? 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலரும், தொழிலதிபருமான பிபிஜி குமரன் என்பவர் படுகொலை வழக்கில் தொடர்புடைய குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வைரம் என்பவரை பழிவாங்கும் நோக்கில் பிபிஜி சங்கர் திட்டமிட்டு இருந்ததாகவும், இது குறித்து தகவல் அறிந்த, குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வைரம் ஆதரவாளர்கள் பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 


 

மேலும் பி.பி.ஜி குமரன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனான மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சங்கர் பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா அல்லது பிள்ளைப்பாக்கம் ஊராட்சி திமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக சங்கர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த படுகொலை சம்பவத்தால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.