தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ம் வகுப்பு துணைத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று, அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. சுமார் 8 லட்டத்திற்கு மேற்பட்டோர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சூழலில் 7.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் நடப்பு ஆண்டில் தேர்ச்சி சதவீதம் 94.03 ஆக பதிவானது. 


சுமார் 47,934 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த நிலையில், அவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த துணைத்தேர்வானது வருகின்ற ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 26ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான கால அட்டவணையையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. 


இந்த நிலையில், 12ம் வகுப்பு துணைத்தேர்வை தொடர்ந்து 11ம் வகுப்பு துணைத்தேர்விற்கான கால அட்டவணையையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இந்த 11ம் வகுப்பு துணைத்தேர்வானது வருகின்ற ஜூன் 27ம் தேதி ஜூலை 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 27,28,30,1,3,4,5 ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை 11ம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெற இருக்கிறது. 


11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை: 



12ம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது..? 


19.06.2023: மொழிப்பாடம், 20.06.2023: ஆங்கிலம்


21.06.2023:


கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்
நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம் (ETHICS AND INDIAN CULTURE)
கணினி அறிவியல்
கணினி பயன்பாடுகள்
உயிர் வேதியியல்
மேம்பட்ட மொழி (தமிழ்)-  (ADVANCED LANGUAGE (TAMIL) )
வீட்டு அறிவியல் (HOME SCIENCE)
அரசியல் அறிவியல்
புள்ளிவிவரங்கள் (STATISTICS)
நர்சிங் தொழிற்கல்வி
அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்


22.06.2023: 


இயற்பியல்
பொருளாதாரம்
கணினி தொழில்நுட்பம்


23.06.2023:


கணிதம்
விலங்கியல்
வர்த்தகம்
மைக்ரோ உயிரியல்
ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங்
உணவு சேவை மேலாண்மை
வேளாண் அறிவியல்
நர்சிங் (பொது)


24.06.2023:


உயிரியல்
தாவரவியல்
வரலாறு
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்
அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
அடிப்படை சிவில் இன்ஜினியரிங்
அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்
அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
டெக்ஸ்டைல் டெக்னாலஜி
அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்


26.06.2023:


வேதியியல்
கணக்கு
நிலவியல்.