ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட எருமைகள் கரூரில் பறிமுதல்

இந்த லாரியை தமிழக இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் கரூர்- குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தி வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

Continues below advertisement

ஆந்திராவில் இருந்து 30 எருமைகளை சட்ட விரோதமாக கேரளவிற்கு  அடிமாட்டிற்காக கடத்தி சென்ற லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Continues below advertisement

 


 

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தை சேர்ந்த ரோஸ் காளி நாயுடு என்பவருக்கு சொந்தமான லாரி ஒன்று ஆந்திர மாநிலம், சிலக்கலூர் பேட்டையில் இருந்து 30 எருமைகளை சட்டவிரோதமாக பொள்ளாச்சி சந்தைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கேரளாவிற்கு அடிமாட்டுக்காக கொண்டு சென்ற லாரி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. 

 


 

இந்த லாரியை தமிழக இந்து மக்கள் முன்னணி மாநில தலைவர் தமிழ்ச்செல்வன் கரூர்- குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்தி வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் 30 எருமை மாடுகளையும் மீட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோசாலைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 

 


லாரியை பறிமுதல் செய்த போலீசார் எருமை மாடுகளை சட்டவிரோதமாக அடிமாட்டிற்கு அனுப்புவதற்காக உணவு, தண்ணீர் கொடுக்காமல் நெருக்கமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்து, கடத்திச் சென்ற குற்றத்திற்காக லாரியின் உரிமையாளர் ரோஸ் காளி நாயுடு, மாடுகளின் உரிமையாளர் சேகர் மற்றும் லாரி ஓட்டுநர் சேகர் ஆகிய மூவர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola