புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை  சேர்ந்தவர் எலிசபெத் இவர் தனது இரண்டு மகன்களான நசரேன் (17), நிக்கோலஸ் (15) ஆகியோருடன் வசித்து வருகிறார், இவரது கணவர் மார்டின் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் படித்து வருகின்றனர்,  இந்நிலையில் அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 10 -ஆம் வகுப்பு படிக்கும் எலிசபெத்தின்  இரண்டாவது மகன் நிக்கோலஸ் அவ்வப்போது தாயின் செல்போஃனை எடுத்து கொண்டு ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்காமல் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார், இதேபோல் நேற்று இரவும் மாணவன் நிக்கோலஸ் செல்போஃனில் கேம் விளையாடுவதை கண்ட எலிசபெத் ஆத்திரம் அடைந்து செல்போஃனை தரையில் போட்டு உடைத்துள்ளார். இதில் மனம் உடைந்த மாணவன் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளான், வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தாயார் அக்கம் பக்கத்தினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து பார்த்தபோது மாணவன் தனது தாயின் புடவையை எடுத்து மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது, தொடர்ந்து மாணவனை ஜிப்மர் மருத்துவமனை அழைத்துச்சென்றபோது அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்




மேலும் இது குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கின்போது இளைஞர்கள் பலர் உணவை மறந்து, ஆன்லைன் விளையாட்டே கதி என கிடக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை கட்டிப்போட்டுள்ள முக்கிய கேம் பப்ஜி.. சுடு.. கொல்லு.. வெட்டு.. என நொடிக்கு நொடி வெறியேற்றும் பப்ஜி விளையாட்டில் மூழ்கிவிட்டால் உலகம் மறந்துவிடும்.. ஆனால், அந்த கேம் உலகத்திற்குள் இருந்து விலகி இருக்குமாறு தொல்லை கொடுத்தால் இளைஞர்களும்், சிறுவர்களும் தற்கொலை செய்து கொள்வதுதான் அதிர்ச்சியான விஷயமாக உள்ளது




 பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பே நிக்கோலஸ்  அந்த விளையாட்டிற்கு அடிமையாகியிருந்தார். பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த நிலையிலும் ஏற்கனவே அதைத் தரவிறக்கம் செய்திருந்தால் அந்த செயலி செயல்படும். அந்த வகையில் தடைக்குப் பின்னரும் டேனியல் பப்ஜியில் மூழ்கியிருந்தார். மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில்  மூழ்கிய மகனைத் தாய் கண்டித்ததால், 10-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பப்ஜி அடிமைத்தனம் முடிவுக்கு வருமா ? என கோரிக்கை எழுந்துள்ளது. பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகள், சிறார்களை மீட்க பெற்றோர் தான் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கி்ன்றனர் மனநல மருத்துவர்கள்.