பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகளை பார்த்த சைபர் கிரைம் போலீசார்யூ டியூப் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கரை 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


இந்த நிலையில் சேலம் சைபர் கிரைம் காவல்துறையினர், சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் கீதா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் யூ டியூப் சவுக்கு சங்கர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவு படுத்துதல் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.