சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி கிராமம் கலர்பட்டி பகுதியைச் சேர்ந்த கட்டுமான பொருட்கள் விற்பனையாளரான செல்வராஜ். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் இருந்துள்ளனர். முருகன் தனக்கு சொந்தமான நிலத்தை ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட நிலத்தை முருகன் திருப்பி பெறாத நிலையில் கடந்த 26 ஆம் தேதி அன்று சம்பந்தப்பட்ட நிலத்தை செல்வராஜ், ஜலகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்த நபரிடமிருந்து கிரையம் செய்து பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் செல்வராஜுக்கும் முருகனுக்கும் முன் பகை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் செல்வராஜின் நண்பர் கந்தசாமி கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் பெறுவதற்காக செல்வராஜை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு குறுக்குப்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தபோது எடப்பாடி, ஜலகண்டாபுரம் பிரதான சாலையான கலர்பட்டி அருகே அதிவேகமாக முருகன் என்பவர் எதிரே ஓட்டி வந்த டாட்டா சுமோ மோதி அவரை கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த செல்வராஜ் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் செல்வராஜ் மற்றும் உடன் பயணித்த கந்தசாமி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.



அப்போது நிலை தடுமாறிய செல்வராஜ் கந்தசாமியும் கீழே விழுந்த நிலையில் டாடா சுமோ வாகனத்தில் வந்த முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளுடன் செல்வராஜை நோக்கி பாய்ந்து உள்ளனர். உடனே எழுந்து ஓட முயன்ற செல்வராஜை துரத்திச் சென்ற முருகன் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் செல்வராஜின் தலையில் பலமாக வெட்டியுள்ளனர். மேலும் முருகனை பின்தொடர்ந்து ஸ்கூட்டியில் வந்த தனது 16 வயது மகன் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த செல்வராஜை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகன் வந்த இருசக்கர வாகனத்தில் சூரி கத்தி உள்ளதாகவும் அதை எடுத்துக் கொண்டு செல்வராஜை நோக்கி குத்த முயற்சித்த போது எதிர்பாராத விதமாக தந்தை பின்பக்கமாக குத்தியதில் காயம் ஏற்பட்டது. மீண்டும் செல்வராஜை முருகன் பலமாக பிடித்துக் கொண்ட போது மகன் கத்தியால் குத்தியதில் செல்வராஜின் வயிற்றில் இருந்த குடல் வெளியில் வந்தது.


பின்னர் தந்தை மகன் இருவரும் டாட்டா சுமோவில் தப்பிச் சென்றனர். அப்போது அருகில் இருந்தவர்கள் செல்வராஜ் மற்றும் கந்தசாமி இருவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் முருகன் மற்றும் அவரது மகன் இருவரையும் கைது செய்து மகனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தொடர்ந்து நில தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்து இரண்டு பேர் உயிரிழந்தது தொடர்பாக பூலாம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.