Upcoming Bikes in November 2023: நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள, புதிய மோட்டார் சைக்கிள் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


ஆட்டோமொபைல் சந்தை:


அக்டோபரில் பல ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்கலை இந்திய சந்தையில் அறிமுகப்படுதின. பட்ஜெட், ஸ்போர்ட்ஸ், அட்வென்சர் மற்றும் மின்சாரம் என பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி நிறுவனங்கள் சந்தைக்கு கொண்டு வந்தன. Triumph Scrambler 400X, ஏதர் 450X Long Range, ஹோண்டாவின் XL750 Transalp, கவாசகியின் ஹைப்ரிட் நின்ஜா 7 போன்ற பல்வேறு மாடல்கள் அறிமுகமாகின. அந்த வகையில் நவம்பர் மாதமும் பல்வேறு உற்பத்தி நிறுவனங்களின் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.




  • ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450




நவம்பர் 7ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இந்த வாகனம், 450cc சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூலிங் இன்ஜினை கொண்டுள்ளது. இன்னும் உறுதி செய்யப்படாவிட்டாலும் ஹிமாலயன் 450 மாடல் ரைடிங் மோட்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.  டூயல்-சேனல் ஏபிஎஸ் அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 2.70 - ரூ.2.80 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.




  • CFMoto 300SR




சீனாவைச் சேர்ந்த CFMoto நிறுவனத்தின் புதிய 300SR மாடல் மோட்டர்சைக்கிள் இந்திய சந்தையில், நவம்பர் 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  292 cc ஒற்றை சிலிண்டர் இன்ஜினிலிருந்து 8,750 rpm உடன் 29 bhp டார்க்கையும்,  7,250 rpm உடன் 25.3 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதன் விலை இந்திய சந்தையில் 3 லட்சத்திலிருந்து 3.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




  • பிஎம்டபள்யூ CE 02 Electric 




பிஎம்டபள்யூ நிறுவனத்தின் புதிய CE 02 Electric மோட்டார்சைக்கிள், இந்திய சந்தையில் நவம்பர் 16ம் தேதி அற்முகம் செய்யப்பட உள்ளது.  CE-02 இன் ஒற்றை பேட்டரி பேக் மாறுபாடு 119 கிலோ எடை கொண்டது மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகம் மற்றும் 45 கிலோமீட்டர் வரம்பை கொண்டிருக்கும். இரட்டை பேட்டரி பேக் மாறுபாடு 132 கிலோகிராம் அளவைக் காட்டுகிறது. அதிகபட்ச வேகம் மணிக்கு 95 கிமீ மற்றும் 90 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில் 7 லட்சத்திலிருந்து 8 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.  




  • கேடிஎம் புதிய 390 டியூக்




கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 டியூக் மாடல் இந்திய சந்தையில் வரும் நவம்பர் 17ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் இதன் விலை அதிகபட்சமாக 3.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.




  • பெனெல்லி புதிய TNT 300:




பெனெல்லி நிறுவனத்தின் புதிய TNT 300 மாடல் இந்திய சந்தையில் வரும், நவம்பர் 17ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




  • டிவிஎஸ் ZEPPELIN




டிவிஎஸ் நிறுவனத்தின் செப்லின் மாடல் மோட்டர் சைக்கிள், நவம்பர் 17ம் தேதி சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.




  • Husqvarna Svartpilen 125




சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Husqvarna நிறுவனத்தின் Svartpilen 125 மாடல் மோட்டார்சைக்கிள், இந்திய சந்தையில் நவம்பர் 21ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 




  • Suzuki E- Burgman




சுசுகி நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டரான பர்க்மேன் நவம்பர் 21ம் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 1.20 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




  • ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன்




ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஷாட்கன் 650 மாடல் நவம்பர் 23ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 3.25 லட்சம் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




  • பெனெல்லி




பெனெல்லி நிறுவனத்தின் புதிய 752S மாடல் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் நவம்பர் 24ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 7 லட்ச ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI