Crime: போலீஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் ரூ.2 கோடி மோசடி - எஸ்.ஐ. உள்பட 3 பேர் மீது நடவடிக்கையா?

போலீஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் 2 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement

சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவு லயன் மேடு பகுதியில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் அருகில் செயல்பட்டு வருகிறது. இங்கு சேலம் மாநகர காவல் துறைக்கு சொந்தமான கார்கள், வேன்கள் மற்றும் லாரிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் இடம் உள்ளது. இந்த நிலையில் இங்கு பணியாற்றிய எழுத்தர் உட்பட நான்கு பேர் காவல்துறை வாகனங்களுக்கு நிரப்பக்கூடிய டீசலை மோசடி செய்து ரூபாய் இரண்டு கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

Continues below advertisement

போலி கணக்கு:

அதாவது கடந்த ஏழு ஆண்டுகளாக ஓடாத காவல்துறை வாகனங்களை இயக்கியதாகவும், பழுதான வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதாகவும், போலி கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர ஆண்கள் மற்றும் பெண்கள் காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்களுக்கு சுமார் 1460 லிட்டர் டீசல் நிரப்பியதாக மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் உயிர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மோட்டார் வாகனபிரிவில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஒருவர் ஊர்க்காவல் படைக்கும், இரண்டு ஏட்டுகளில் ஒருவர் டவுன் குற்றப்பிரிவிற்கும், மற்றொரு ஏட்டு மத்திய குற்றப்பிரிவிற்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளனர்.

இடமாற்றமா?

இது குறித்து காவல்துறையிடம் விசாரித்தபோது, மோட்டார் வாகன பிரிவில் வாகனங்களுக்கு டீசல் நிரப்பியதில் மோசடி நடந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. புகாரில் சிக்கிய உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை அவர்கள் ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை வாகனத்திற்கு டீசல் நிரப்புவதில் மோசடி நடந்துள்ள புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடம் மாற்றம் செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. காவல்துறையினர் மோசடி புகார் சிக்கி உள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola