திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் வயது 52. இவர் ஹோமியோபதி மருத்துவம் படித்து விட்டு அப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு தனது வீட்டிலேயே அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து பேரளம் போலீசார் மாரியப்பனை அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் கொல்லுமாங்குடி அருகில் உள்ள சிறுபுலியூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் வயது 52 என்பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு தனது மருந்தகத்தில் நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததாக பேரளம் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். அதே போன்று நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் மருந்தாளுநர் படிப்பு முடித்துவிட்டு மருந்தகம் நடத்தி வந்த செந்தில் என்பவர் மருத்துவம் படிக்காமல் தனது மருந்தகத்தில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக செந்திலை நன்னிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறி நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பெருகவழந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன்,அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த குமார், சேகரை பகுதியைச் சேர்ந்த சவுரிராஜ் உள்ளிட்ட பத்து போலி மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்