புனேவில் வாட்ஸப் ஸ்டேடஸ் காரணமாக குற்றவாளி ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள காக்டேசாவ்ல், பாலாஜி நகரில் உள்ள ரஜினி கார்னர் பகுதியை சேர்ந்தவர்  மாதவ் ஹனுமந்த் வாக்டே , இவருக்கு வயது 28. இவர் மீது  ஏற்கனவே இரண்டு குற்றங்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இவரை உடன் இருந்த நண்பர்கள் சிலர் கொலை செய்துவிட்டதாக  மாதவின் நண்பர் ஒருவர் காவல்நிலயத்தில்  புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி :

சார்ங் என்ற இளைஞர் ,  காம்தே என்ற இளைஞர் குறித்து வாட்ஸப் ஸ்டேடஸில் செய்திகளை உலவ விட , அதை நீக்குமாறு காம்தே  மற்றும் அவரது நண்பரான சுனில் காப்டே  என்பவரும் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சார்ங்  அவர்களை மதிக்காமல் அங்கிருந்து நகர்ந்ததாக தெரிகிறது. எனவே சாரங்கை பழி வாங்க வேண்டும் என்ற எண்ண‌த்தில் பிரபல ரவுடியான மாதவினை(இறந்தவர்)  தொலைபேசியில் அழைத்திருக்கிறார் சுனில் காப்டே. இருவரும் சாரங்கினை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது.





 உடனே மாதவும் அவரது நண்பரும் (புகார் அளித்தவர் ) பிப்டெவாடி ,ஓடிஏ பகுதியில் உள்ள சுனில் காப்டேவின் வீட்டிற்கு   சென்றுள்ளனர்.  வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த பொழுது  சாரங்கின் நண்பர்கள் சிலர் (10 பேர்),  மாதவினை  மூங்கில் குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அருகில் கிடந்த சிமெண்ட் மூட்டையினை மாதவின் தலையில் வீசியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து மாதவின் நண்பர் காவல் துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில்  முக்கிய குற்றவாளிகளான இருவரை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் ஐபிசி 302 கீழ் வழக்குபதிவு செய்து தப்பியோடிய நபர்களை  தேடிவருவதாகவும் காவல்துறையின தெரிவித்துள்ளனர்.





சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வழக்குடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்போன் ஸ்டேட்டஸ் காரணமாக நடந்த சண்டையில் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. ஸ்டேட்டஸ் வைத்தது ஒரு நபர், அதற்கு தொடர்புடைய நபரின் நண்பர், அவருக்கு நெருங்கிய நண்பருடன் ஸ்டேட்டஸ் வைத்தவரை தீர்த்துக்கட்ட போட்ட திட்டம், அப்படியே உல்டாவாகி ரவுடி கொலைக்கு காரணமாகியுள்ளது.




யாரோ ஒருவர் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், பிரபல ரவுடியை காவு வாங்கியிருப்பது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையானவர்கள் ரவுடி என்பதால், அவரது ஆதரவாக எதிர் தாக்குதல் எதுவும் நடந்து விடாதபடி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிலரிடம் விசாரணையும் நடந்து வருகிறது. இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.