திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கையில் இருந்த கட்டையை கொண்டு அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. கஞ்சா போதையில் இந்த இளைஞர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தநிலையில், அந்த இளைஞருக்கு மனநலம் சரியில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். காவல்துறையினரின் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் திருவண்ணாமலை பொதுமக்கள், திருவண்ணாமலையில் சர்வசாதாரணமாக கஞ்சா வியாபாரம் காவல்துறை அனுமதியுடன் நடப்பதாகவும், கஞ்சா போதையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மாட்டினால் அவர்கள் மனநலம் பாதித்தவர்கள் என்பதை கூறி அவர்கள் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்வதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். 


ஆன்மிக நகரமான திருண்ணாமலை நகருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கும் 14 கிலோமீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வதற்காகவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் அவ்வாறு வருபவர்கள் பேருந்து போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.



இதனால் திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் பயணிகள்  கூட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த ஒரு சம்பவம் திருவண்ணாமலையில் மக்களிடையே மற்றும் வியாபாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது. திருவண்ணாமலை மத்திய  பேருந்து நிலையம் வேலூர் செல்லும் பேருந்து பகுதி நிறுத்ததில் தடைகரை பெண் வியாபாரி ஒருவர் கொய்யாபழம் விற்கும் பெண்ணிடம் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் வியாபாரியிடம் திடிரென தகராறில் ஈடுப்பட்டார்.


திடீரென அந்த வாலிபர் கையில்  உருட்டுக்கட்டை எடுத்து சராமாரியாக தாக்குதல் நடத்த முயன்றார். அப்போது பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் குழந்தைகள். அதனைக்கண்டு தெரித்து ஓடிவிட்டனர் அதன் பின்னர் மீண்டும், கொய்யா வியாபாரம் செய்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி, உருட்டு கட்டையால் கிரிக்கெட் விளையாடுவது போன்று கூடையை உடைத்து பழங்களை நாசம் செய்து பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளை உடைத்தும் பொதுமக்களை அச்சுருத்தும் வகையில் ஈடுப்பட்டார். சம்பவ இடத்தில் காவல் துறையினர் இருந்துள்ளனர் ஆனால் காவல்துறையினர் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தாமல் பொதுமக்களுடன்  அவர்களும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர் 



அதனைத்தொடர்ந்து தகராறில் ஈடுப்பட்ட இளைஞரை பொதுமக்கள் சிறை பிடித்து சரமாரியாக நையப்புடைத்தனர், அதன் பிறகு அங்கு இருந்த காவல்துறையிடம் பொதுமக்கள் இளைஞரை ஒப்படைத்தனர். அரை மணி நேரமாக பேருந்து நிலையத்தில் இளைஞர் ரகளையில் ஈடுப்பட்டார்.  


இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்கையில்


 விழுப்புரம் மாவட்டம் சேய்பேட்டை  கிராமத்தை சேர்ந்தவர் எனவும் இவர் சொந்த ஊரில் இருந்து பெங்களூருக்கு செல்வதற்காக தாய்யுடன் இந்த இளைஞர் வந்துள்ளார். இவர் இதற்கு முன்பு மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்துள்ளார் என்பதும் இவர் தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார் எனவும் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டதால் பேருந்து நிலையத்தில் தகராறு செய்தது காவல்துறையினர் கூறியுள்ளனர் 



இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் திருவண்ணாமலையில் காவல்துறையினரின் சம்மதத்துடன் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக கஞ்சா அடித்து விட்டு இரவு நேரங்களில் டீ வியாபாரம் செய்யும் நபர்களை இதுபோன்ற இளைஞர்கள் மிரட்டி பணம் பறித்து செல்வது இங்கு சர்வசாதாரணமாக நிகழும் நிகழ்வாக மாறிவிட்டதாகவும், புறவழிச்சாலை எடப்பாளையம் செல்லும் சாலையில் கஞ்சா போதையில் பல இளைஞர்கள் வழிபறியில் ஈடுபட்டு வருவதாகவும்,  இது போன்று கஞ்சா அடித்துவிட்டு சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று கூறி காவல்துறையினர் மறைத்து விடுகின்றனர் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.