சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான மதன் என்கிற சுள்ளான் மதன்(26). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி மர்ம நபர்களால் ஓட ஓட விரட்டி கரும்பு தோட்டத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளி மிதுன்மாணிக்கம் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது.
சுள்ளான் மதன் பழிக்கு பழி
இதனிடையே சுள்ளான் மதனின் ஆதரவாளர்கள் என சொல்லிக் கொள்ளும் இளம் வயதினர் பலர் இந்த கொலைக்கு பழி வாங்கியே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு சிவகங்கையை பதறவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறையில் சம்பந்தப்பட்ட பதிவுகளை வெளியிட்ட சமூக வலைத்தளத்தை முடக்கியும் பயனாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: எதிர்பாராத ட்விஸ்ட்..! இதற்காக தான் சுள்ளான் மதனை போட்டு தள்ளினோம்! போலீஸ் பகீர் தகவல்!
இன்ஸ்டாவில் மிரட்டல்
இந்நிலையில் சுள்ளான் மதன் கொலை சம்பவத்தின் எதிரொலியாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மிரட்டல் தொனியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆம்பூர் கானா நிதிஷ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ‘பல கொலைகள் செய்து பெரிய ரவுடியானவர் அகிலன் அண்ணா… சிவகங்கை மாவட்டத்தில் கேட்டுப் பாரு ஐயா… பகைகள் வளரும், தலைகள் சிதறும்” எனப் பஞ்ச் டயலாக் பேசி மிரட்டல் தொனியில் பதிவிட்டுள்ளார்.
அக்னி பிரதர்ஸ் குழு
நிதிஷ் குறிப்பிட்டுள்ள அகிலன், சுள்ளான் மதனின் குரூப்பான அக்னி பிரதர்ஸ் குழுவின் முக்கிய நபராவார். இவர் 2024 ஆம் ஆண்டு காளையார்கோவில் அருகே நடந்த வாகனச் சோதனையின் போது போலீசாரை தாக்க முயன்றதால் காலில் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். கானா நித்திஷின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவோர் மீது மாவட்ட காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
