சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன் (26). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் தனக்கு எதிரானவர்களை மிரட்டும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டும் வந்துள்ளார். கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சுள்ளான் மதன் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 

Continues below advertisement

சுள்ளான் மதன்

இந்நிலையில் கடந்த அக்டோபர் 18ம் தேதி மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுள்ளான் மதன் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுள்ளான் மதனை ஓட ஓட விரட்டி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இதையும் படிங்க: கொலைகள் தொடரும்.. தலைகள் உருளும்.. சுள்ளான் மதன் ஆதரவாளர்கள் பகிரங்க மிரட்டல்.. அலறும் சிவகங்கை!

Continues below advertisement

முக்கிய குற்றவாளி மிதுன் மாணிக்கம்

முதற்கட்ட விசாரணையில் சுள்ளான் மதனை கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மானாமதுரை அருகே வேலூர் முருகபாஞ்சானை சேர்ந்த மிதுன்மாணிக்கம், திருப்புவனத்தை சேர்ந்த அதிபதி ராஜா(26), உடைகுளத்தை சேர்ந்த பாலமுருகன்(19),  பாபு(23), சந்துரு(19), மாணிக்கம்(26), பிரதீப்(28), வாசு உள்ளிட்ட 9 பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் பாலமுருகன், பிரதீப், பாபு ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி மிதுன் மாணிக்கம் உள்ளிட்ட 6 பேரை தீவிரமாக தேடி வந்தனர். 

பழிக்கு பழி நடந்த கொலை

இந்நிலையில் மிதுன் மாணிக்கம் மற்றும் அவரது கூட்டாளி அஜித்குமார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து கைது எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில்: கடந்த ஓராண்டிற்கு முன் சிவகங்கை பேருந்து நிலையம் அருகில் ராஜேஷ் என்பவர் கொலையானார். இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியான அருண்பாண்டியன் கைதாகி சிறையில் உள்ளார். இவரின் நெருங்கிய நண்பரான ரவுடி சுள்ளான் மதனுக்கும் தொடர்பு இருப்பதை அடுத்து போலீசார் கைது செய்தனர். 

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மதனை, ராஜேஷின் நெருங்கிய நண்பரான மிதுன் மாணிக்கம் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணித்து வந்ததை அடுத்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். முதலில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.