சென்னை புழல் சிறையில் பாதுகாப்பையும் மீறி இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர். 24 மணி நேரமாக 14 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புழல் மத்திய சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தும், வெவ்வேறு இடங்களில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், பாலியல் வழக்கில் திருமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மற்றொருவர் நேபாளத்தைச் சேர்ந்த சுதிர் போகத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்து சிறை வளாகத்திலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் இருந்து இரண்டு கைதிகள் எப்படித் தப்பிச் சென்றனர்? சிறைக் காவலில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தப்பியோடிய இரண்டு கைதிகளையும் பிடிக்க 14 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, கடந்த 24 மணி நேரமாகத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் புழல் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதுவரை எந்த முதலமைச்சரும் சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சினிமா பட பாணியில் புழல் சிறையின் பாதுகாப்பை மீறி கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
