Just In

ஆபாச படம், கட்டாய செக்ஸ் - திருமணமாகி 43 நாட்களே.. சென்னை கணவனின் அட்டூழியம், நீதிமன்றம் அதிரடி

பெண்ணின் மேலாடையை பிடித்து இழுத்து சென்ற காவல் ஆய்வாளர்.. மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு

ஆன்லைன் மோசடியில் சிக்கிய விழுப்புரம் மாவட்டம் ; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

பலமணி நேரம் காத்திருந்தும் வராத ஆம்புலன்ஸ் - பரிதாபமாக பிரிந்த பெண்ணின் உயிர்... மயிலாடுதுறையில் சோகம்

Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
மதுரை ஓட்டலில் நுழைந்து உரிமையாளர் படுகொலை: கையை வெட்டி எடுத்துச் சென்ற கொடூரம்!
மதுரை அரசு தொழிற் பயிற்சி பள்ளி வாசலில் உணவக உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை.
Continues below advertisement

போலீஸ்_ஆய்வு
மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் மதுரை k.புதூர் பகுதியில் இருக்கக்கூடிய (I.T.I) அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் எதிரே மெஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் உணவகத்தில் இருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் முத்துக்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அவருடைய இடது கையினை அரசு தொழிற் பயிற்சி பள்ளி வாசலில் போட்டுவிட்டு சென்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் தடையங்களை சேகரித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு தொழிற்பயிற்சி பள்ளி வாசலில் உணவக உரிமையாளர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது..,” மதுரை கே.புதூர் பகுதி பரபரப்பானது. இப்பகுதியில் உள்ள ஐ.டி.ஐ அருகே சிறிய ஹோட்டல் ஒன்றை முத்துக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மதியம் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது கையை துண்டாக எடுத்த கொலையாளிகள் அருகே வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் விரைவாக வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம். புதூர், மூன்று மாவடி, அவுட் போஸ்ட், ரிசர்வு லைன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.சி.டி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என தெரிவித்தனர்.
மதுரையில் ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.