பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.பாலாற்றில் சுமார் 34 ஆயிரத்து 500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இதே பாலாற்றில் நேற்று 24 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டிருந்தது.




 இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாலாற்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட நபரை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர்.




முதல்கட்ட விசாரணையில், அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பதும் மது போதையில் ஆற்றில், நேற்று தனியாக மது அருந்தியுள்ளார் படுத்து உறங்கியதும் தெரியவந்தது. திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்து வந்தார். தொடர்ந்து பல மணி நேரம் பாலத்திலிருந்து கூச்சலிட்டு வந்துள்ளார். சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தபோது ஒருவருக்கு இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நபர் இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் லாவகமாக மது பிரியரை மீட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண