திருவாடனை அருகே செங்கமடை வயல் காட்டு பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுடியின் தலை மற்றும் உடல் தனித்தனியாக கிடந்ததை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடையச் சேர்ந்த பாண்டி என்ற முத்துப்பாண்டி பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே மூன்று கொலை வழக்குகளும் பல்வேறு கொள்ளை வழக்குகளும் ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு முதல் பாண்டியை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் இன்று காலையில் செங்கமடை அருகே வயல்காட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் தலை துண்டிக்கப்பட்டு தலை தனியாகவும் உடல் தனியாகவும் கிடப்பதாக திருவாடானை போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவாடானை டிஎஸ்பி நிரிஷ் மற்றும் போலீசார் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றினர். இவர், முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு அரசியல் பின்புலம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயல்காட்டு பகுதியில் தலையும் உடலும் தனித் தனியாக ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்