காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் ராணுவ பயிற்சி அதிகாரிகள் தாக்கப்பட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக பாஜக அரசை விமர்சித்துள்ளனர்.


நடந்தது என்ன.?


மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில், நேற்று இரண்டு ராணுவப் பயிற்சி அதிகாரிகள், அவர்களது பெண் தோழியுடன் சுற்றுலாவிற்கு சென்று இருந்திருக்கின்றனர். அப்போது, அங்கு ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் அவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து, அங்கிருந்த பெண்களில் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர்.


ராகுல் காந்தி கண்டனம்:


இந்த சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். "மத்திய பிரதேசத்தில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அவர்களது பெண் தோழி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது ஒட்டுமொத்த சமூகத்தையும் அவமானப்படுத்த போதுமானது. பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது.






"குற்றவாளிகளின் இந்த துணிச்சலானது, அரசு நிர்வாகத்தின் மொத்த தோல்வியின் விளைவாகும். நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் இந்திய மகள்களின் சுதந்திரம் ஒரு தடையாக உள்ளது," என்று அவர் மேலும் கூறினார். 


மாயாவதி கண்டனம்:


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இந்தச் சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார். இதுபோன்ற கொடூர சம்பவங்களை அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் நிலைமை கட்டுக்கடங்காமல் உள்ளது. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.


"பெண்களின் மரியாதையை மறந்துவிடுங்கள், அவர்களின் பாதுகாப்பு குறித்த பெரிய அறிக்கைகள், மனிதகுலத்தை அவமானப்படுத்தும் கொடூரமான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன, இது சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்கள் மத்தியில்  சட்டத்தின் மீதான பயம் மறைந்துவிட்டது என்பதை நிரூபிக்கிறது. இது மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது," என்று அவர் மேலும் கூறினார்.