மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது புனே. புனேவில் வசித்து வந்த தம்பதிகளுக்கு நீண்ட வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதற்காக அவர்கள் பல்வேறு சிகிச்சை பெற்றும் அவர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, கோவில்களுக்கும் சென்று வந்த அவர்கள் மாந்திரீகர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார்.




மௌலானா பாபா ஜமாதர் என்ற அந்த மாந்திரீகர் அந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அருவி ஒன்றில் அந்த பெண் நிர்வாணமாக குளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறிய அருவி பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி ஆகும். மாந்திரீகரின் பேச்சைக் கேட்ட அந்த பெண்ணின் கணவரும், அவரது கணவரின் குடும்பத்தார் அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அருவிக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பலரின் முன்பு நிர்வாணமாக குளிக்க வைத்துள்ளனர்.


மேலும் படிக்க : கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பள்ளி பஸ்களை சேதப்படுத்திய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்


இதனால், கடுமையான மன உளைச்சல் அடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை புகாராக அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் அவரது கணவரின் பெற்றோர்களும், கணவரின் குடும்பத்தாரும் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்க முடியவில்லை என்றும், வரதட்சணை போதவில்லை என்றும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக கொடுமைப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.




மேலும், தனது கணவர் மீது அந்த குற்றச்சாட்டில் அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். அதில், தனது கணவர் ரூபாய் 75 லட்சம் கடன்தொகையை தனது போலி கையெழுத்து மூலம் வாங்கியதாகவும் கூறியுள்ளார். தனது கணவரால் குடும்பத்தாரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்திய குற்றப்பிரிவான 498ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த பெண்ணை நிர்வாணமாக குளிக்க ஆலோசனை வழங்கிய மாந்திரீகர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இந்தியா முழுவதும் பல இடங்களில் மாந்திரீகர்களின் தவறான வழிகாட்டுதால், இதுபோன்ற விபரீத பூஜைகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் வட இந்தியாவில் நதியில் உடலுறவு கொண்டால் குழந்தை பேறு உண்டாகும் என்று சாமியார் ஒருவர் கூறியதை கேட்டு தம்பதிகள் மக்கள் கூட்டம் மிகுந்த நதியில் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Crime: மாமியார் தற்கொலை.. 4 வயது மகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பதற்றம்.. என்ன நடந்தது?


மேலும் படிக்க : ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் மோசடி; ரூ. 25 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு - நெல்லை மாநகர காவல் ஆணையர்