புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியின் கூட்டாளிகளான 4 பேரை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை லாஸ்பேட்டை, உருளையன் பேட்டை, தன்வந்திரி நகர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட 12 வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்து வந்தது. நிலுவையில் இருந்த இவ்வழக்குகளில் ஒன்றான உருளையன் பேட்டை பகுதியை சேர்ந்த அரசு பெண் ஊழியர் ஒருவரை கத்தியால் வெட்டி சங்கிலி பறித்த வழக்கில் சிசிடிவி காட்சியை குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்த போது அதில் 4 பேரின் அடையாளம் தெரிந்தது.


ப்ளஸ் 2 மாணவர்-மாணவி மர்ம மரணம்: கோமுகி ஆற்றங்கரையோரம் சடலம் கண்டுபிடிப்பு!




இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளிகளான கார்த்திக், உண்டியல் செந்தில், ராம்கி, ஆனந்த் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களை புதுச்சேரி குற்றப்பிரிவு போலீசார் மதுரைக்குச் சென்று கைது செய்துள்ளனர் மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை பாட்டில் மணி என்பவர் காஞ்சிபுரத்தில் ஒரு வழக்கில் சிக்கிய போது கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். தற்போது கைதாகியுள்ள மதுரை கும்பலுக்கு புதுச்சேரி ரவுடி ஒருவர் அடைக்கலம் கொடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


மொய் பணத்தில் கை வைத்து எஸ்கேப்: பிரபல ‛மொய்’ ஜெய் கைது.. போட்டோ எடுக்கும் கேப்பில் டாட்டா காட்டுபவர்!


விழுப்புரம் : பெண் தற்கொலை ; வரதட்சணை புகாரில், கணவர் குடும்பத்தினர் கைது


புதுச்சேரியில் கொலை, நகை பறிப்பு, வாகன திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் சமீகாலமாக அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ரவுடிகளை ஒடுக்க ஆப்ரேஷன் திரிசூல் என்ற பெயரில் அவ்வப்போது ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பைக் திருட்டு, கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ரெட்டியார்பாளையம் காவல் சரகத்துக்குட்பட்ட இடங்களில் தொடர் திருட்டு, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண