புதுச்சேரி முதலியார்பேட்டை இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் டிரைவர் ஸ்டீபன் (34). கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி ஸ்டீபன், தனது அண்ணன் செந்திலிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் வெட்டினார். மேலும் தடுக்க முயன்ற ஸ்டீபனையும் வெட்டியதாக கூறப்படுகிறது.


பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகம்:


இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்டீபன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் சிறையில் இருந்து ரமேஷ் வெளியே வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை ரமேஷ் முதலியார்பேட்டை ஆலை ரோட்டில் உள்ள பாஜக அசோக்பாபு எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த ஸ்டீபன் ரமேசிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.


வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ஸ்டீபன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரமேசை சரமாரியமாக வெட்டினார். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த பலத்த வெட்டு விழுந்தது. இதனால் நிலைகுலைந்து போன ரமேஷ் சம்பவ ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். குடியிருப்புகள், கடைகள் மிகுந்த அந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.


பெரும் பரபரப்பு:


இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் உயிருக்கு போராடிய ரமேசை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே ரமேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர