நாள்: 26.06.2023 - திங்கள்கிழமை


நல்ல நேரம்:


காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை


நண்பகல் 1.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் விலகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திடீர் பயணங்களால் மாற்றம் ஏற்படும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.


மிதுனம்


வியாபார பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் மனதில் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பேச்சுத்திறமையால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். நலம் நிறைந்த நாள்.


கடகம்


எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் மாற்றமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். சிறு தூரப் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.  சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் கிடைக்கும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிதானமான பேச்சுக்கள் நன்மையை உண்டாக்கும். கனிவு வேண்டிய நாள்.


கன்னி


பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வேலையாட்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடுகள் வேண்டும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைப் பொருட்களின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். சிந்தனைகள் மேம்படும் நாள்.


துலாம்


வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வேள்வி பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மறதிகள் குறையும் நாள்.


விருச்சிகம்


இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மேம்படும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சாதனைகள் நிறைந்த நாள். 


தனுசு


விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். நட்பு நிறைந்த நாள்.


மகரம்


விவேகமான செயல்பாடுகள் மதிப்பை மேம்படுத்தும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


கும்பம்


வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அசதிகள் நிறைந்த நாள்.


மீனம்


விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வர்த்தகப் பணிகளில் லாபம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.