உணவு தட்டுகளால் உடலை கிழித்து புதுவை சிறையில் கைதிகள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி அருகே காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு 74 தண்டனை கைதிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிறிஷ்னியா உத்தரவின் பேரில் போலீசார் காலாப்பட்டு சிறையில் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 12ஆம் தேதி நடந்த சோதனையில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் என்ற கைதியிடம் இருந்து ஒரு செல்போனை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு
இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் தங்களை கொடுமைப்படுத்துவதாகவும், குடும்பத்தினரை சந்திக்க விடுவதில்லை என கூறியும் 50க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
கடந்த 24ம் தேதி சிறை கைதிகள் 7 பேர் திடீரென தங்களின் உணவு சாப்பிடும் தட்டுகளால் தங்கள் கைகளில் கிழித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. உடனே அவர்களை சிகிச்சைக்காக காலாப்பட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினர்.
இதேபோல் விசாரணை கைதிகள் ஏழுமலை, ஸ்டீபன் ஆகிய 2 பேரும் சோப்பு மற்றும் ஷாம்பு போன்ற ரசாயன கரைசலை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனால் மயங்கி விழுந்த அவர்களை சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டுது. இந்தநிலையில் 26ம் தேதி இரவு கைதிகள் சுகன் (28), பிரதீப் (26) ஆகியோர் திடீரென இரும்பு ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து 2 பேரையும் அங்கிருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு திரும்பினர்.
நேற்று இரவு சிறை அறையிலிருந்த ஜமால், சத்யா உள்ளிட்ட 5 கைதிகள், தாங்கள் அடைக்கப்பட்டுள்ள அறையிலிருந்து வேறு அறைக்கு மாற்ற கோரியுள்ளனர். ஆனால் அவர்கள் வேறு அறைக்கு மாற்றப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்கள் கூர்மையான சிறு பொருளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையறிந்த சிறைத்துறை போலீஸார் அவர்களை மீட்டனர். இதில் இருவரை கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், மற்ற 3 பேரை புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.
கடந்த 2 மாதத்தில் 16 கைதிகள் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Afganistan : தலிபான்களிடம் சிக்கிய ராணுவ Machine.. கலக்கத்தில் ஆப்கான்வாசிகள்