கரூர்: ஆசிரியர் மீது பொய் வழக்கா? - மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியின் முன் போராட்டம்

பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை  நடத்தினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

Continues below advertisement

குளித்தலை அடுத்த தோகைமலை பொம்ம நாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக மருதை (59) பணியாற்றி வருகிறார். இவர் திருமணமாகாதவர். இப்பள்ளியில் 6, 7, 8 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர், மாணவிகளிடம் அடித்தும், கொச்சை வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும், பாலியல் தொந்தரவு செய்துள்ளதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement


அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் நிலையை எடுத்துக் கூறி புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மேரி லாரா சேசுராஜ் விசாரணை செய்து,  குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசியிடம் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவியல் ஆசிரியர் மருதையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டம்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டார். ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பேச்சு வார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குண்ணாகவுண்டன் பட்டியைச் சேர்ந்தர் மருதை (59). இவர் தோகைமலை அருகேயுள்ள பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்  அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 


இவர் கடந்த சில மாதங்களாக 6 முதல்  8ம் வகுப்பு படிக்கும் 11 மாணவ, மாணவிகளை ஆபாசமாக திட்டி, தவறான நோக்கத்துடன்  அவர்களை உடலை தொட்டதாக புகார் எழுந்ததாகவும், அதுதொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியை மேரி லாரா அளித்த புகாரின்பேரில் ஆபாசமாக திட்டுதல் மற்றும் போக்சோ (குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் மருதை மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.


இதுகுறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியரை பொய் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி,  குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மாணவ, மாணவிகள்  போராட்டத்தை கைவிட மறுத்தனர்.


இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் மாணவ,  மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவ, மாணவிகளை வகுப்புகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களிடம் ஆட்சியர், எஸ்.பி. பேச்சுவார்த்தை  நடத்தினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

 

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு வழக்கில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அடிப்படையில் ஆசிரியரை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் தற்போது ஆசிரியருக்காக பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola