Crime : அலைபாயுதே பார்ட் 2... அதுவும் 2 தாலியோடு; தட்டித்தூக்கிய போலீஸ்.. சிக்கிய இளைஞர்..

சிறுமியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

Continues below advertisement

இன்ஸ்டாவில் காதலித்து இரண்டு முறை தாலி கட்டி சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Continues below advertisement

சென்னை அண்ணாநகர் திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது 16 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், மேல்மருவத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மிளவு அழகன் என்ற 19 வயது இளைஞருடன் சிறுமி இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரையும் கடந்த திங்கட்கிழமை திருமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

மேலும் படிக்க: Murder: நடத்தையில் சந்தேகம்? - மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் - நெல்லையில் பயங்கரம்

தாலியை கழட்டிய பெற்றோர்

இதன்பின்னர், சிறுமியிடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.  தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மிளவு அழகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியதாகவும், இரண்டு பேரும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் திருமணம் கொண்டதாகவும்,  தாலியை பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து வந்த நிலையில், ஒருநாள் பெற்றோர் கண்டுபிடித்து தாலியை கழட்டினர் என்றும் சிறுமி தெரிவித்தார். அலைபாயுதே பட பாணியில் தாலி கட்டிகொண்டு இருவரும் இருந்து வந்துள்ளனர்.


இரண்டு முறை தாலி காட்டிய இளைஞர்

இதனைத்தொடர்ந்து, மிளவு அழகனிடம் விசாரித்தில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சிறுமியை காதலிப்பதாக கூறிய அவர், சிறுமியை கடந்த 27ம் தேதி சென்னையில் இருந்து கடத்திச்சென்று மேல்மருவத்தூரில் உள்ள ஒரு கோயிலில் மீண்டும் தாலிகட்டியதாகவும், பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க: Crime : பணியிலிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த மேலாளர்.. தூக்கிய காவல்துறை.. சென்னையில் பரபரப்பு

போக்சோவில் கைது

இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இளைஞர் மிளவு அழகனை போக்சோ உள்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிறுமியை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola