ஜூன் மாதத்திற்கான 5-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலனை ஒவ்வொரு ராசிக்கும் கீழே விரிவாக காணலாம். 


மேஷம் :




மேஷ ராசிக்கார நண்பர்களே திடீர் பணப்பிரார்த்தம் உண்டாகும். குழந்தைகள் மூலம் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் இருந்து பணவரவு உண்டாகும். சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். குடும்பம், குடும்பம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு நல்ல வரவேற்பு ஏற்படும். இடமாற்றம், பணிமாற்றம் ஏற்படும். இந்த வாரத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் உண்டு. பெண்களுக்கு பேச்சுவார்த்தை அபாரமாக இருக்கும். அஸ்வினி நட்சத்திரத்தினருக்கு தனப்பிரார்த்தம் ஏற்படும். பரணி நட்சத்திரத்தினருக்கு தொலைத்தூர தொடர்பு ஏற்படும். கிருத்திகை நட்சத்திரத்தினருக்கு பூர்வ புண்ணிய பிரார்த்தம் ஏற்படும். இந்த வாரம் அமோகமாக இருக்கும். முருகனை வழிபட வேண்டும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இரண்டு நாட்களில் பயணம் செய்வீர்கள். நீண்ட நாட்களாக சொல்ல நினைத்ததை வெளியில் சொல்வீர்கள். குழந்தைகளுடன் அன்யோன்யமாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு உண்டு. கண்டிப்பாக பதவி உயர்வு உண்டாகும். பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும். ரோகிணி நட்சத்திரத்தினருக்கு திருமணத்தடைகள் நீங்கும். நல்ல விஷயங்கள் காதில் வந்து சேரும். நல்ல வாரமாக இந்த வாரம் அமையும். மகாலட்சுமி, அம்மன் வழிபாடு அவசியம்.


மிதுனம் :


முதல் இரண்டு நாட்களில் பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் ஆரோக்கியமான விவாதம் நடக்கும். சின்ன இடமாற்றம் ஏற்படும்.. திருமணத் தடைகள் நீங்கும். கழுத்து, தொண்டை, தோல் வழியில் பிரச்சினை ஏற்படும். இளைய சகோதரர் வழியில் பிரச்சினை ஏற்படும். சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று ருத்ரதவம் செய்ய வேண்டும். பொருளாதார ஏற்றம் இருப்பதால் அபார வாரமாக உள்ளது. பயணங்களில் கவனம் தேவை. ஸ்ரீகிருஷ்ணனை வழிபாடு செய்ய வேண்டும்.


கடகம்:




கடக ராசியினருக்கு யார் என்ன செய்தாலும் அது உங்களுக்கு சாதகமாக மாறிவிடும். வேலையில் மிகவும் சுறுசுறுப்பாக பொறுப்புடன் இருப்பீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் முக்கியஸ்தர்கள் தொடர்பு கிடைக்கும். முக்கிய பொறுப்புகளுக்கு உங்களுக்கு அழைப்பார்கள். நல்ல நேரம் உள்ளது. கடன்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நன்மை தரும். நல்ல விஷயங்களில் முக்கிய அங்கமாக இருப்பீர்கள். பயணம் மேற்கொள்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு அபாரமாக உள்ளது. குலதெய்வ வழிபாடு அவசியம்.


சிம்மம் :


சிம்ம ராசியினருக்கு இடமாற்றம், தொழில்மாற்றம் நடைபெற வாய்ப்ப உள்ளது. இடமாற்றம் மற்றும் தொழில் மாற்றத்தில் சிறு, சிறு குழப்பங்கள் உண்டாகும். பயணம் சந்தோஷத்தை கொடுக்கும். கடன் வரவு நடக்கும். முக்கிய ஆவணங்கள் கைக்கு கிடைக்கும். ஏராளமான நன்மைகள் நடைபெறும். தொட்டதெல்லாம் துலங்கும் வாரமாக இந்த வாரம் அமையும். பதற்றம் இருக்கக்கூடாது. நல்ல விஷயங்களை எண்ண வேண்டும். தான தர்மம் செய்யுங்கள். சுந்தரகாண்டம் படியுங்கள். ஆஞ்சநேயர் வழிபாடு அவசியம்.


கன்னி :


கன்னி ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. அனைவரையும் நம்பலாம். ஆனால், ஒருவரை மட்டும் நம்பக்கூடாது. இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மன உளைச்சல் உண்டாகும். இரவு நேரத்தில் தூக்கமின்மையால் அசதி உண்டாகும். பெண்கள் ஆல மரத்திற்கு கீழே இருந்த விநாயகரை வழிபட வேண்டும். பயணங்கள் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். மறைவான பகுதிகளில் பெண்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். திருப்பதி ஏழுமலையானை வழிபட்டு வர வேண்டும். சித்திரை நட்சத்திரத்தினருக்கு மனக்கவலை, மனச்சோர்வு ஏற்படும். சுமாரான வாரமாக இந்த வாரம் இருக்கும்.




துலாம் :


துலாம் ராசிக்கார நண்பர்களுக்கு தேர்வுகள் எளிதாக அமையும். மறைவான விஷயங்கள் பெரியளவில் வெற்றி அளிக்கும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். ஹயக்கிரீவர் வழிபாடு அவசியம். சகலகலா வல்லவராக மாறும் அம்சம் உண்டு. முக்கிய விஷயங்களை தள்ளிப்போடுவது அவசியம். பொறுமை மிகவும் அவசியம். உடல் நலத்தில் அக்கறை அவசியம், எல்லா வகையிலும் வெற்றி கிட்டும் வாரம். அதேநேரத்தில் சுற்றத்தாரிடம் கவனம் தேவை. எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் அமையும். மதிப்பும், மரியாதையும் உண்டு.


விருச்சிகம் :




விருச்சிக ராசியினர் இரண்டு மனநிலையில் இந்த வாரம் இருப்பீர்கள். ரகசியத் தன்மை கொண்டவராக இருப்பீர்கள். வேலை தொடர்பான விஷயம் வெற்றியை அளிக்கும். மகிழ்ச்சியை அளிக்கும். பெண் மூலமாக நன்மை கிட்டும். திருமணத் தடைகள் நீங்கம். கேட்ட நட்சத்திரத்தினருக்கு புதிய வேலை, புதிய தொழில் அமையும் வாய்ப்புகள் உண்டு. யோகமான காலமாக அமைந்துள்ளது. பணத்தேவைகள் பூர்த்தி ஆகும். முன்னோர்கள் வழிபாடு கைகொடுக்கும். கடன் கொடுப்பதில் கவனம் தேவை. காதல் கைகூடும். கரூர் தான்தோன்றி மலை வெங்கடாச்சலபதி வழிபாடு அவசியம்.


தனுசு :


தனுசு ராசியினருக்கு சந்திராஷ்டம தாக்கம் இருக்கும். தேவையில்லாத அவமானங்களை சந்திக்க நேரிடும். ஆஞ்சநேய வழிபாடு அவசியம். எடுத்ததெல்லாம் இந்த வாரம் வெற்றி அமையும். சொத்துக்கள், வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நிரந்தர வேலை உண்டாகும். ஆசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டிங் தொழில் அமோகமாக அமையும். பணம் மற்றும் தனப்பிரார்த்தம் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் நன்மை உண்டாகும். ஆஞ்சநேயருக்கு நெய் உருண்டை வைத்தியே வழிபாடு செய்து குழந்தைகளுக்கு தானம் செய்ய வேண்டும். சந்தோஷமான வாரமாக அமையும்.


மகரம் :


மகர ராசியினர் லிங்காஷ்டகம் படிக்க வேண்டும். தடைகள் உடையும். குழந்தைகளால் சில சில குழப்பங்கள் உண்டாகும். கடவுள் பிரார்த்தனை உண்டாகும். சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். பெண்களின் கணவன் பெற்றோர்கள் உடல்நலத்தில் பாதிப்ப ஏற்படும். முதல் மூன்று நாட்கள் தேவையற்ற குழப்பம் ஏற்படும். முக்கியஸ்தர்களின் உதவி கிட்டும். வீட்டு விவகாரத்தில் அடுத்தவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். வியாபாரிகளுக்கு வெளிநாடு பயணம் செய்ய வாய்ப்பு உண்டு. பயணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைந்தாலும் வெற்றி கிட்டும்.


கும்பம் :




கும்ப ராசியினர் நரசிம்ம பாராயணம் செய்ய வேண்டும். நரசிம்ம வழிபாடு அவசியம். உங்களிடம் வேண்டுமென்று பிரச்சினை செய்ய சிலர் உள்ளனர். வேலைப்பளு அதிகரிக்கும். சிறுநீரக கல் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, மறைவான பகுதிகளில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். புதிய வாகன யோகம் உண்டு. பணப்பிரார்த்தம் உண்டாகும். ஏதோ ஒன்று புதியதாக இந்த வாரம் வாங்குவீர்கள். மனநிறைவு கிட்டும். சந்தோஷம் உண்டாகும். மாணவர்களுக்கு வெற்றி எளிதில் கிட்டும். வியாபாரிகளுக்கு கடன் கொடுப்பதில் கவனம் தேவை. தொழிலில் கூடுதல் கவனம் தேவை. வேலைக்கு செல்பவர்களுக்கு கவனம் தேவை. ஆரோக்கியமும் அவசியம். திருப்தியான வாரமாக அமைந்துள்ளது. சதயம் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள்.


மீனம் :


மீன ராசி நண்பர்களே துர்க்கை அம்மன் வழிபாடு அவசியம். நீங்கள் எதிரியாக மாறுவீர்கள் அல்லது எதிரியை உருவாக்குவீர்கள். நல்லது செய்தாலும் தீமை ஏற்படும். முக்கிய ஆவணங்கள் கைக்கு வரும். அரசுப்பணி யோகம் கிட்டும். ஹோட்டல் தொழில் வெற்றி கொடுக்கும். சொந்த தொழில் கைகொடுக்கும். கவுரவம் கிட்டும். ஏராளமான வெற்றி வாய்ப்புகள் குவியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அன்யோன்யம் உண்டாகும். வெற்றியை தரும் வாரம் இது. வார இறுதியில் மனதில் குழப்பம் உண்டாகும். அம்மன் வழிபாடு அவசியம். கௌரவம் தேடி வரும். பணத்தேவைகள் பூர்த்தி ஆகும். அபாரமான வாரமாக இது மாறும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண