விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தரம்சந்த் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் வினோத் (26). இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27 ஆம் தேதி இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு செல்ல சந்தமேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், வினோத்தை திடீரென ஆட்டோவில் கடத்தி சென்றனர். அப்போது அவரிடம் இருந்து செல் போனையும் பறித்துக் கொண்டனர். தொடர்ந்து தங்களுக்கு 50 ஆயிரம் கொடுத்தால் தான் விடுவோம், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன வினோத், அவர்களிடம் இருந்து செல்போனை வாங்கி தனது நிறுவனத்தின் மேலாளருக்கு தொடர்பு கொண்டு கடத்தல் காரர்கள் பணம் கேட்பது குறித்து  தெரிவித்தார்.  இதற்கிடையே, அந்த மேலாளர் இது குறித்து ரோஷணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.


PM Modi Net Worth: பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?




 


அதன் பேரில் காவல் ஆய்வாளர் பிருந்தா தலைமையிலான போலீசார், கடத்தல் கும்பல் எங்கு பதுங்கி உள்ளனர் என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீஸ் தங்களை தேடுவது பற்றி அறிந்த கடத்தல் கும்பல், போலீசாருக்கு பயந்து  நேற்று முன்தினம் இரவு வினோத்தை நொளம்பூர் சாலையில் இறக்கி விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர். இதையடுத்து ரோஷணை போலீஸ் நிலையம் சென்று, தன்னை கடத்தியவர் யார் என்பது  குறித்து தெரிவித்த வினோத், இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளித்தார்.


அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய  திண்டிவனம் அடுத்த சாரம் பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் முருகன் (27), சாரங்கபாணி மகன் வசந்த் (20), தங்கமணி மகன் கிருஷ்ணகாந்த் (20), ஆட்டோ டிரைவரான தென்பசார் பூந்தோட்ட தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (42) ஆகியாரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஈச்சேரி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் மகன் அருள் என்கிற சசிக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


Sneha Dubey: இம்ரான்கானை அலறவிட்ட இந்தியப்பெண்.. யார் இந்த சினேகா துபே?


Girish Mathrubootham Success Story: சம்பளக்காரர்களை கோடீஸ்வரனாக்கிய தமிழனின் கதை