நாட்டு சர்க்கரை என நினைத்து எலி மருந்து கலந்த பாலை குடித்த 2 குழந்தைகள் பலியானார்கள். தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சேத்தூர் கிராமத்தில் உள்ள காமாட்சி நகரை சேர்ந்தவர் பால முருகன். இவரது மனைவி பிரியா (வயது 26). இந்த தம்பதிக்கு ஜெய்காந்த் (4), ஜெய்விஷ்ணு (3) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். பால முருகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா தனது குழந்தைகளுடன் சேத்தூரில் வசித்து வந்தார். பிரியா தனது குழந்தைகளுக்கும், தனக்கும் பால் காய்ச்சி வைத்து உள்ளார்.

 

 

அப்போது பாலில் கவன குறைவாக நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்தை போட்டு காய்ச்சி உள்ளார். பின்னர் அதை தனது குழந்தைகள் இருவருக்கும் கொடுத்து விட்டு மீதம் உள்ள பாலை பிரியா குடித்ததாக கூறப்படுகிறது. குழந்தைகள் இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். தொடர்ந்து பிரியாவும் மயங்கி விழுந்தார். இதனை அறிந்த பிரியாவின் உறவினர் ரேவதி மற்றும் அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் திருநள்ளாறு சமுதாய நலவழி மருத்துவ மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

 

பின்னர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். பிரியா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்காபட் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

 

 

 

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாவே எலி மருந்து கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு தானும் குடித்தாரா? அல்லது உண்மையிலேயே கவன குறைவாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நாட்டு சர்க்கரை என நினைத்து எலி மருந்து கலந்த பாலை குடித்த 2 குழந்தைகள் பலியானா, இந்த சம்பவத்தால் சேத்தூர் கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

meera mithun arrested video : இங்கயே செத்துருவேன்.. கைதுக்கு முன் பரபரப்பு வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மீண்டும் விசாரிக்க போலீசார் முடிவு!