கரூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த கந்தன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கரூர் வெங்கமேடு இரயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவலின் பேரில் கரூர் மாவட்ட தனிப்படை போலீஸாரால் கரூர்-வெங்கமேடு இரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த கந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.




இவர் கஞ்சா விற்பனை செய்வதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து ஆத்தூர், சமத்துவபுரம்பகுதியில்பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேற்படி நபரை தொடர்ந்து கண்காணித்து வந்த வகையில் இன்று மாவட்ட தனிப்பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, கரூர் வெங்கமேடு இரயில்வே மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கந்தன் கைது செய்யப்பட்டார்.




அவரிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி நபர் மீது வெங்கமேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மேற்படி நபர்மீது வெங்கமேடு மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலையங்களில் சுமார் 8 கஞ்சா வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.




மேற்படி கந்தன் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தனிப்படை போலீஸார் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.