கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் . இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் செல்போன் கடையை துவங்கியுள்ளார்.
இந்த செல்போன் கடைக்கு தனது அலைபேசியை பழுது பார்க்க வந்தவர் ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் கௌசல்யா. அடிக்கடி செல்போன் கடைக்கு தனது அலைபேசியை சரிசெய்ய வருகின்ற போது செல்போன் கடை உரிமையாளர்கள் மீது காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தை கடந்த காதலாக மாறியது. செல்போன் கடையிலேயே பல நாட்களாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் டி.செல்லாண்டிபாளையத்தில் வசிக்கும் கார்த்தி தனது வீட்டிற்கு நாள்தோறும் காலதாமதமாகவே சென்றுள்ளார். இது சம்பந்தமாக மனைவி கேட்டபோது கடையில் அதிக வேலை ஆகவே தான் நான் வருகைக்கு காலதாமதம் ஆகிறது என மழுப்பலான பதிலை பல தடவை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவர் ஏதோ மறைப்பதாக உணர்ந்த மனைவி வனிதா திடீரென அவரது செல்போன் கடைக்கு சென்றுள்ளார்.
ஆயுதப்படை பெண் காவலர் கௌசல்யா
அங்கு கார்த்திக் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் கௌசல்யா தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக கடை ஊழியரிடம் கேட்டபோது நாள்தோறும் கடைக்கு வருவார்கள் வந்தவுடன் ஓனர் இருவரும் கிளம்பி சென்று விடுவார்கள் என்று கடை ஊழியர் வனிதாவிடம் கூறியுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த வனிதா கோபமுற்று கடையி வைத்து அவர்களிடம் பிரச்சினை செய்துள்ளார். கார்த்திக், தனது மனைவியை சமரசம் செய்து தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
செல்போன் கடை உரிமையாளர் கார்த்தி
இந்நிலையில் மீண்டும் கள்ளக்காதல் தொடர்ந்து உள்ளது. இதை கண்காணிக்க முடிவு செய்த வனிதா ஒரு நாள் தகவல் தெரிவிக்காமல் கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆயுதப்படை பெண் காவலரும், செல்போன் கடை உரிமையாளர் கார்த்திக்கும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்த வனிதா, கழற்றி வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரின் உடைகளை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
தனது யூனிபார்ம் காணவில்லை என்றதும் பதட்டமடைந்த பெண் காவலர் மட்டும் கார்த்திக் இருவரும் மாற்று உடை ஏற்பாடு செய்து, வனிதா இல்லத்திற்கு சென்று பிரச்சனை செய்துள்ளனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கியவுடன் சத்தம் போடாமல் அங்கிருந்து பெண் போலீஸ் கிளம்பி உள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த செல்போன் கடை உரிமையாளர் மனைவி வனிதா இது சம்பந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் பெண் காவலர் என்பதால் புகாரை அங்கு எடுக்கவில்லை.இதைத் தொடர்ந்து தனது அம்மா, அப்பா, மகளுடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுதப்படை பெண் காவலர் அணிந்திருந்த யூனிபார்ம் உடன் புகார் அளிக்க வந்தார் வனிதா.
செல்போன் கடை உரிமையாளர் கார்த்திக்கின் மனைவி வனிதா
பின்னர், இது சம்பந்தமாக அவர்கூறுகையில், ‛‛எனது கணவர் ஆயுதப்படை பெண் காவலர் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்க வில்லை. எனவும், இதனால் நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.
கரூரில் ஆயுதப்படை பெண் காவலர் செல்போன் கடை உரிமையாளர் கள்ளக்காதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.