தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களிலும் 7 கொலை வழக்குகள் உள்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இன்று வழக்கு ஒன்றிற்காக துரைமுருகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, காவல்துறையை துரைமுருகன் தாக்க முயற்சித்துள்ளார். அப்போது, காவல்துறையினர் பாதுகாப்பு கருதி துரைமுருகனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த என்கவுண்டரினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
POLICE ENCOUNTER : தூத்துக்குடியில் என்கவுண்டர் : 18 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை
சுகுமாறன் | 15 Oct 2021 04:15 PM (IST)
தூத்துக்குடியில் 18 குற்றவழக்குகளில் தொடர்புடைய தொடர் குற்றவாளியை போலீசார் சற்றுமுன் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.
போலீஸ் என்கவுண்டர்