சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி நகைகளை பறித்து சென்ற  திருடன் கைது செய்து கொள்ளையடித்த நகைகள் போலீசார் மீட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான இருசாயி. இவர் கடந்த அக்டோபர் 13 -ம் தேதி தனது வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருக்கும் போது இரவு சுமார் 2 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசாயின் முகத்தில் துணியை போட்டு மூடியும். அவரது கழுத்தை நெறித்தும் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க செயின், இரண்டு காதுகளில் இருந்த 1 சவரன் தோடு, கையில் போட்டிருந்த அரை சவரன் மோதிரம் உள்ளிட்ட ஆறரை சவரன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளான்.


Edappadi Palaniswami: : ”திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதுதான் அவர்களது சாதனை”.. எடப்பாடி பழனிசாமி அதிரடி!




அப்போது இருசாயின் சத்தம் கேட்டு இருசாயின்  வீட்டில் திரண்ட அக்கம் பக்கத்தினர்,  செயினை பறித்தததில் கழுத்தில் காயமடைந்த இருசாயினை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுகுறித்து புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருடனை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா கொரடாச்சேரி பாலக்குடி புதுத்தெருவைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் 28 வயதான அஜித் குமார் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


Chennai Jobs: எம்.பி.பி.எஸ். படித்தவரா? மாதம் ரூ.90,000 ஊதியம்; விண்ணப்பிப்பது எப்படி? -முழு விவரம்!




விசாரணையில் பழையாறு கிராமத்தில் இருசாயி வீட்டிற்குள் புகுந்து, அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்ற அஜித்குமார் குடவாசல் பகுதியில் 3 அடகு கடைகளில் நகையை அடமானம் வைத்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று கடைகளில் அடமானம் வைத்த ஆறரை பவுன் நகைகளை பறிமுதல் செய்து அஜித் குமாரை சீர்காழி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர். 


Vijaya Baskar: நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் என்பது தேர்தல் நாடகம் - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு..




மேலும் மயிலாடுதுறை  மாவட்டத்தில் அவ்வப்போது பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதும், அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும் விரைவாக விசாரணை செய்து கண்டு பிடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றாலும், இதுபோன்ற சம்பவங்களை நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


LCU Timeline: லோகேஷ் கனகராஜின் LCU டைம்லைன்; கதை எங்கு, யாரிடம் தொடங்குகிறது? எப்படி இணைக்கப்பட்டுள்ளது?